Published:Updated:

'கொள்ளையைத் தடுத்த நாய்!'- சிசிடிவி-யில் பதிவான காட்சி

'கொள்ளையைத் தடுத்த நாய்!'- சிசிடிவி-யில் பதிவான காட்சி
'கொள்ளையைத் தடுத்த நாய்!'- சிசிடிவி-யில் பதிவான காட்சி

திருடனைக் கொள்ளையடிக்க முடியாமல் நாய், தடுத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை வேளச்சேரி நேருநகர் மதியழகன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி.  இவரின் வீட்டில் கீழ் தளம், மற்றும் மேல் தளத்தில் நான்கு குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரத்தில் மேல்சட்டை அணியாத வாலிபர், சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்று உள்ளார்.அப்போது யாரிடமும் சிக்காமல் இருக்க கீழ் தளத்தில் உள்ள வீட்டை வெளிப்புறமாக பூட்டி உள்ளார். பிறகு மாடிக்கு சென்று டார்ச் லைட் மூலம் ஜன்னல் வழியாக வீட்டினுள் இருக்கும் பொருட்களை நோட்டமிட்டுள்ளார். வாலிபரின் நடமாட்டத்தைப் பார்த்து அந்த வீட்டில் உள்ள நாய் குரைக்க தொடங்கியது. இந்தச் சத்தம் கேட்டு கீழ்த்தளத்தின் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வர முயன்றனர். ஆனால் அவர்களால் வர முடியவில்லை. இதனால் வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர் இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் வாகன சைரன் சத்தம் கேட்டவுடன் வாலிபர் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடிவிட்டார். பிறகு போலீஸார் கதவை திறந்தனர் . அதன்பிறகே வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்தனர். 

நாயால்  கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.