Published:Updated:

வாட்ஸ்அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாச செய்கை! இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

சிந்து ஆர்
வாட்ஸ்அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாச செய்கை! இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
வாட்ஸ்அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாச செய்கை! இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

யூனிஃபாமில் வாட்ஸ்அப் வீடியோ காலிங்கில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தவர் பென்சாம். இவரின் இரண்டு ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் கடந்த ஜூலை மாதம் வைரலாகப் பரவியது. அந்த வாட்ஸ்அப் வீடியோவில் யூனிஃபாமில் காட்சியளிக்கும் இன்ஸ்பெக்டர் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டார். எதிர்புறம் பேசும் பெண்ணின் உருவம் மற்றும் என்ன பேசினார்கள் என்பது கிராபிக்ஸ் மூலம் மறைக்கப்பட்டிருந்தது. யூனிஃபாமில் இருக்கும்போதே ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வீடியோ வெளியானது காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. வாட்ஸ்அப் வீடியோ உரையாடல் கருங்கல் காவல் நிலையத்தில் வைத்து நடந்ததாகக் காவல்துறை வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பென்சாம் ஜூலை மாதம் 14-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி (34) என்ற பெண், இன்ஸ்பெக்டர் பென்சாம் யூனிஃபாமில் இருக்கும்போது தன்னை வாட்ஸ்அப் ஆன் செய்யச்சொல்லி வீடியோ ஹாலிங்கில் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டார் என அளித்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமைச் சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.