Published:Updated:

ஐந்தாயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி செய்துவிட்டு நைஜீரியா தப்பிச்சென்ற குஜராத் தொழிலதிபர்

நீரவ் மோடி விவகாரத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வங்கி மோசடி நடந்த பிரச்னை பூதாகரமாகியது. இப்போது அந்த வரிசையில் மற்றொரு குஜராத் தொழில் நிறுவனம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐந்தாயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி செய்துவிட்டு நைஜீரியா தப்பிச்சென்ற குஜராத் தொழிலதிபர்
ஐந்தாயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி செய்துவிட்டு நைஜீரியா தப்பிச்சென்ற குஜராத் தொழிலதிபர்

குஜராத் மாநிலம் வதோதராவில் இயங்கிவருகிறது, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம். இந்தத் தனியார் நிறுவனத்தின் சார்பில் யுகோ, ஆந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப், அலகாபாத் உள்ளிட்ட வங்கிகளில் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இந்தக் கடன்களைத் திரும்பிச்செலுத்தாமல், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்களான நிதின் சந்தேசரா மற்றும் திப்டி சந்தேசரா ஆகியோர் மோசடிசெய்ததாக வங்கிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை இந்த நிறுவனத்தினர்மீது வழக்குப்பதிவுசெய்து, இந்தத் தனியார் நிறுவனத்தின் 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.

இந்த நிலையில், நிதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிலிருந்து நைஜீரிய நாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. நிதின் ஐக்கிய அரசு எமிரேட்டில் அதிகாரிகளால் சிறைவைக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியாகியது. செய்தி வெளியான உடனே, 'அது உண்மையில்லை; புகார் எழுவதற்கு முன்னரே அவர்கள் அனைவரும் நைஜீரியாவுக்கு தப்பித்துச் சென்றுவிட்டார்கள்' என்று அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

நீரவ் மோடி விவகாரத்தில் 10 ஆயிரம் கோடிக்கு வங்கி மோசடி நடந்த பிரச்னை பூதாகரமாகியது. இப்போது அந்த வரிசையில், மற்றொரு குஜராத் தொழில் நிறுவனம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.