Published:Updated:

`649 லிட்டர் கள்ளச்சாராயம்; வழக்கில் சிக்கிய 138 பேர்!' - அதிர்ச்சி கொடுத்த நீலகிரி நிலவரம்

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

`சிறிய மாவட்டத்தில் இத்தனை பேர் கள்ளச்சாராய வழக்கில் கைதாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவர்களுக்கு முறையான கவுன்சலிங் வழங்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்'

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

மிக அத்தியாவசியத் தேவை தவிர இதர காரணங்களுக்கு மக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் கிடைக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.

மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க திண்டாடுவது ஒருபுறம் என்றால் மதுப் பிரியர்களின் பாடு பெரும்பாடாக உள்ளது. மதுக்கடை மூடப்பட்ட ஒரு சில நாள்கள் அதிக விலைகொடுத்து கள்ளச்சந்தையில் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். சில நாள்களில் அதுவும் கிடைக்காமல் போகவே சொந்தமாக சாராயம் காய்ச்சும் பணியில் பலரும் இறங்கிவிட்டனர்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள நீலகிரியில் கள்ளச்சாராயம் தயாரிப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

அதிலும், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கூடலூர், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு கள்ளச்சாராயம் தொடர்பான புகார்கள் வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

மதுக்கடைகள் மூடப்பட்டது முதல் தற்போதுவரை நீலகிரியில் 649 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 138 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 53 பேரை சிறையில் அடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேசுகையில், ``நாள்தோறும் மதுவைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சிறிய மாவட்டத்தில் இத்தனை பேர் கள்ளச்சாராய வழக்கில் கைதாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவர்களுக்கு முறையான கவுன்சலிங் வழங்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு