Published:Updated:

டெல்லியில் 10 வயது சிறுமி பலாத்காரம்!

டெல்லியில் 10 வயது சிறுமி பலாத்காரம்!
டெல்லியில் 10 வயது சிறுமி பலாத்காரம்!
டெல்லியில் 10 வயது சிறுமி பலாத்காரம்!
புதுடெல்லி: டெல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்பேருந்தின் டிரைவர் பலாத்கார தடுப்பு புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த சம்பவத்தின் தாக்கம் இலேசாக குறைந்த நிலையில், டெல்லி சுல்தான்புரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் 11 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
டெல்லி சுல்தான்புரியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை நிறுத்தப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள், திருமண கோஷ்டி, யாத்ரீகர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த பேருந்து வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்த பேருந்துக்குள் ஏறி சிறுவர், சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிரைவர், ஒரு 10 வயது சிறுமியை பார்த்தார். விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளை அடித்து விரட்டிய டிரைவர், அந்த சிறுமியை மட்டும் அங்கு இருக்க சொன்னார். பின்னர் பேருந்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். 
##~~##
இதுகுறித்து அந்த சிறுமி, மறுநாள் பெற்றோரிடம் தெரிவித்தார். டிரைவர் அதே பகுதியில்தான் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோருக்கு டிரைவரை ஏற்கனவே தெரியும். அதனால் டிரைவர் மீது உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டிரைவரை புதிய பலாத்கார சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.