Published:Updated:

2ஜி ஊழல் வழக்கில் தயாளு அம்மாள் 6ஆம் தேதி சாட்சியம்?

2ஜி ஊழல் வழக்கில் தயாளு அம்மாள் 6ஆம் தேதி சாட்சியம்?
2ஜி ஊழல் வழக்கில் தயாளு அம்மாள் 6ஆம் தேதி சாட்சியம்?
2ஜி ஊழல் வழக்கில் தயாளு அம்மாள் 6ஆம் தேதி சாட்சியம்?

புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மே மாதம் 6ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க உள்ளார்.

2ஜி ஊழல் வழக்கி கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் உள்ளிட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, சில வாரங்களாக அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம், சி.பி.ஐ தரப்பு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.

##~~##
மேலும் விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சி.பி.ஐ கடந்த 16ஆம் தேதி அளித்தது. அதில், தயாளுவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
எனினும், தயாளு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுவதால், சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பினாலும் அவர் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சி.பி.ஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பினால், தயாளு அம்மாள் ஆஜராகாமல் இருக்க விலக்கு கோரும் மனு தாக்கல் செய்யப்படும்' என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.