Published:Updated:

மதுரை அருகே குரு பகவான் கோயிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு!

மதுரை அருகே குரு பகவான் கோயிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு!
மதுரை அருகே குரு பகவான் கோயிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு!

தமிழ்நாட்டில் கோயில் சிலை கடத்துபவர்களை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தேடித்தேடி பிடித்து, பலகோடி மதிப்புள்ள சிலைகளை மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிலைக் கடத்தல் கும்பல்களோ கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து சிலை திருட்டில் ஈடுபட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே குரு பகவான் கோயிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு!
மதுரை அருகே குரு பகவான் கோயிலில் பஞ்சலோக சிலைகள் திருட்டு!

மதுரை அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் நேற்று இரவு100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறை சித்திரதர வல்லபபெருமாள் - செண்பவல்லி அம்மையார் குருபகவான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள உற்சவா்களான ஸ்ரீதேவி, பூமாதேவி, வல்லபபெருமாள், சீனிவாசபெருமாள் ஆகிய 4 சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சாமி தரிசனத்துக்காக வந்திருந்த 2 மர்மநபா்கள் கோயிலுக்குள் ஒளிந்துகொண்டுள்ளனா். இது தெரியாமல் பூஜைகளை முடித்துவிட்டு அர்ச்சர்கள் கோயிலை சாத்திவிட்டு வீடு சென்றுள்ளனர்.  அதன் பின்பு மறைந்திருந்த இரண்டு நபா்களும் முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்த 5 சிலைகளில் ஒரு சிலையை மட்டும் அகற்ற முடியாத நிலையில்,  உற்சவா்களான ஸ்ரீதேவி, பூமாதேவி, வல்லபபெருமாள், சீனிவாசபெருமாள் ஆகிய 4 சிலைகளை  துணியால் தங்களது முதுகில் கட்டியபடி கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இந்தக் காட்சிகள் அனைத்தும் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. காலையில் கோயிலை திறந்தபோதுதான் சிலைகள் திருடப்பட்டது தெரிந்து கோயில் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த 4 சிலைகளும் சுமார் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாகவும், பல கோடி மதிப்பிலானது எனவும்  மக்கள் தெரிவித்துள்ளனா். காவல்துறையினர், கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தும், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனா். தொன்மைவாய்ந்த கோயிலில் பஞ்சலோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.