Published:Updated:

`என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்!'‍- பெண் முகத்தில் ஆசிட் வீசிய சேலம் வாலிபர்

வீ கே.ரமேஷ்
சத்யா கோபாலன்
`என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்!'‍- பெண் முகத்தில் ஆசிட் வீசிய சேலம் வாலிபர்
`என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்!'‍- பெண் முகத்தில் ஆசிட் வீசிய சேலம் வாலிபர்

சேலத்தில் கணவரைப் பிரிந்து வாழும் இளம் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம், குகை பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி, கணவர் பாலமுருகன். இவர்களுக்குத் திருமணம் நடந்து 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் காயத்ரி நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். இந்த விஷயம் பாலமுருகனுக்குத் தெரிந்ததும் கணவன் -மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாலமுருகன், காயத்ரியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். 

கணவர் பிரிந்ததையடுத்து சீனிவாசனிடம் பேசுவதை காயத்ரி நிறுத்தியுள்ளார். இருந்தும் சீனிவாசன் தொடர்ந்து காயத்ரியிடம் பேச முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தன் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்காக வந்த காயத்ரியிடம், `என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்' என்று கூறி தகராறு செய்துள்ளார் சீனிவாசன். இன்றும் அவர் பேச மறுக்க அந்தக் கோபத்தில் காயத்ரி மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் சீனிவாசன். 

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் காயத்ரியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் செவ்வாய் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சீனிவாசனைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.