Published:Updated:

கேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்

சிந்து ஆர்
கேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்
கேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்

கேரள மாநிலத்துக்கு வரக்கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளுடன் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்

ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல், கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து தன்னை 2014 - 16-ம் ஆண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிஷப்பை கைதுசெய்யக்கோரி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் கடந்த மாதம் கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர். வாட்டிகனுக்கும் கன்னியாஸ்திரிகள் புகார் அனுப்பினர். இதையடுத்து, பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு பிராங்கோ முளய்க்கல் கடந்த மாதம் 19-ம் தேதி போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.

கேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்

மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் 21-ம் தேதி பிஷப் பிராங்கோவை கோட்டயம் போலீஸார் கைதுசெய்தனர். காவல் துறையினர் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் பிஷப் பிராங்கோ முளய்க்கல் மனுத் தாக்கல் செய்தார். வழக்க விசாரித்த நீதிமன்றம் பிஷப் கேரள மாநிலத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது என்றும், ஆனால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளை விதித்து பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.