Published:Updated:

`தவறுகளிலிருந்து தப்ப விரும்பவில்லை!’ - நீதிபதி குடும்பத்தைச் சுட்ட காவலர் மஹிபால் பின்னணி

சத்யா கோபாலன்
`தவறுகளிலிருந்து தப்ப விரும்பவில்லை!’ - நீதிபதி குடும்பத்தைச் சுட்ட காவலர் மஹிபால் பின்னணி
`தவறுகளிலிருந்து தப்ப விரும்பவில்லை!’ - நீதிபதி குடும்பத்தைச் சுட்ட காவலர் மஹிபால் பின்னணி

டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக கிருஷ்ணகாந்த் சர்மா என்பவர் பணிபுரிகிறார். இவரின் மனைவி ரிது கார்க் (வயது 38), மகன் துருவ் (வயது 18). இருவரையும் ஷாப்பிங் அழைத்துச்சென்ற பாதுகாப்பு போலீஸ்காரர் மகிபால்சிங், இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். படுகாயமடைந்த ரித்து கார்க் மருத்துவமனையில் உயிரிழந்தார். துருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என இன்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவலர் மகிபால் சிங்கை 4 நாள்கள் காவலில் எடுத்துள்ள போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அப்போது,``அவர்கள் மிகவும் அசிங்கமானவர்கள். என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். அதனால்தான் சுட்டுக் கொன்றேன்'' என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி ஊடகத்திடம் பேசிய காவல் அதிகாரிகள்,“ மஹிபால் ஏன் நீதிபதி குடும்பத்தாரைக் கொன்றார் என்பதற்கான முக்கியக் காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதுவரை நடந்த விசாரணையில், அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இதனால் அவரின் குடும்பநிலை, வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினோம். அதில், மகிபால், தன் தந்தை இறந்த பிறகு ஹரியானாவில் உள்ள புங்கர்கா என்ற கிராமத்தில் தன் மாமாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். மஹிபால் போலீஸ் ஆகவேண்டும் என்பது அவரின் மாமாவின் ஆசையாக இருந்துள்ளது. அதன்படி அவரும் நன்கு படித்து, கடந்த 2007-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் மகிபால், குருக்ராம் வந்து தன் குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்துள்ளார். அவர் பற்றி அண்டை வீட்டாரிடம் விசாரித்ததில், அனைவரும் மகிபால் மிகவும் நல்லவர் என்றே சொல்கின்றனர். நீதிபதி கிருஷ்ண காந்த் சர்மா வீட்டில் பணிபுரிவதுக்கு முன், இரண்டு நீதிபதிகளின் வீட்டில் அவர் பணிபுரிந்துள்ளார். 

மகிபாலுக்கு அதிகமாக இணையம் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. தன்னுடைய குழந்தைகள், தன் வாழ்க்கை போன்ற பல விசயங்களை முகநூலில் தொடர்ந்து பதிவிட்டுவந்துள்ளார். மேலும், மதம் சார்ந்த கருத்துக்கள். வீடியோகளையும் அதிகம் பகிர்ந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணியின்போது, `என் குடும்பத்தினருக்காக நான் தவறுகளில் இருந்து தப்பிக்க விரும்பவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறும்போது எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல உணர்ந்தேன்’ எனக் கூறினார். இது தொடர்பாக, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.