Published:Updated:

பாஸ்டன் குண்டுவெடிப்பு; சந்தேக நபர்களின் புகைப்படம் வெளியீடு!

பாஸ்டன் குண்டுவெடிப்பு; சந்தேக நபர்களின் புகைப்படம் வெளியீடு!
பாஸ்டன் குண்டுவெடிப்பு; சந்தேக நபர்களின் புகைப்படம் வெளியீடு!

பாஸ்டன்: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேரது புகைப்படத்தை எப்.பி.ஐ. வெளியிட்டது.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த 15 ஆம் தேதி மராத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து 3 பேர் உயிர் இழந்தனர். 176 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பில் போலீசாருக்கு ஒரு புதிய துப்பு கிடைத்துள்ளது.

பாஸ்டன் குண்டுவெடிப்பு; சந்தேக நபர்களின் புகைப்படம் வெளியீடு!

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள ஒரு கடையில் வைத்திருந்த கேமிராவில் பதிவான வீடியோ காட்சி எப்.பி.ஐ. போலீசாரிடம் சிக்கியது. வீடியோவை பார்த்த போலீசார், மர்ம நபர்கள் இரண்டு பேர் மீது சந்தோகம் அடைந்துள்ளனர். அவர்களை பிடித்தால் உண்மை வெளிவறும் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேரது போட்டோ மற்றும் வீடியோவை எ.பி.ஐ. வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்து பொதுமக்கள் தகவல் தருமாறும் போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

##~~##
சந்தேகத்திற்கு இடமான நபர்களில் ஒருவன்கருப்பு நிற தொப்பி வைத்துள்ளான். .அவனுக்கு பின்புறத்தில் கறுப்புநிற பை இருப்பதும் வீடியோ காட்சியில் இடம் பெற்றிருக்கிறது.(குக்கர் குண்டை கருப்பு நிற பையில் வைத்து பயன்படுத்தியதை ஏற்கனவே போலீசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்). மற்றொருவன் வெள்ளை நிற பேஸ்பால் தொப்பி வைத்துள்ளான். மேலும், கறுப்பு நிற பை மராத்தான் போட்டி முடிவடையும் நிலையில் சில நிமிடங்களிலே வைக்கப்பட்டிருக்கலாம் என்று எப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.