Published:Updated:

துவங்கியது கஜமேளா!

பராமரிப்பா? பரிகாரமா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பைக் கடாசிவிட்டு, யானைகளுக்கான முகாமை ஜோராக ஆரம்பித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. 

கடந்த புதன் அன்று முதுமலை - தெப்பக்காட்டுக்கு வந்த 37 யானைகளுக்கும் மேள தாளத்துடன் ஏகபோக வரவேற்பு. காலையில் மாயாற்றில் குளியல், நடைப் பயிற்சி... பயத்தம் பருப்பு, மஞ்சள், சீரகம் கலந்த சத்தான சாதம், குடற் புழுக்களை நீக்க லேகியம், தளர்ச்சியைப் போக்க வைட்டமின் மாத்திரைகள், உடல் காயங்களை நீக்கக் களிம்புகள் என்று முகாம் நடைபெறும் 48 நாட்களும் யானைகளுக்கு 'புது மாப்பிள்ளை’ மரியாதை தான்.

துவங்கியது கஜமேளா!
துவங்கியது கஜமேளா!
துவங்கியது கஜமேளா!

வனத் துறை அமைச்சர் பச்சைமால், அறநிலை யத் துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் முகா மைத் துவக்கி வைத்தனர்.ஆரம்பத்தில் இந்த முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்த 'தி நேச்சர் டிரஸ்ட்’ நிறுவனர் திருநாரணன், ''கோயில் யானைகளை, முதுமலைக்கு அழைத்து வந்தால், மற்ற வன விலங்குகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால்தான், முகாமை நாங்கள் எதிர்த்தோம். முகாமில் யானைகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கிறார்கள். நோய்த் தடுப்பு மாத்திரைகள் தருகிறார்கள். சத்தான உணவு தருகிறார்கள் என்பது வரவேற்கக் கூடியதுதான். இருந்தாலும் முதுமலை என்பது இந்திய வனங்களிலேயே மிகவும் முக்கியமான பகுதி. இங்கு மனித நடமாட்டம் பெருகுவதாலும் கோயில் யானைகளாலும் இங்கு வசிக்கும் பிற உயிரினங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால், அடுத்த முறையாவது முக்கொம்பு போன்ற வனம் சாரா நீர்நிலைப் பகுதிகளில் இந்த முகாமை நடத்த வேண்டும்.'' என்றார்.

முதல்நாள் நடத்திய சிறப்புப் பூஜைகளும், முதல்வரின்  தொகுதியான திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு மட்டும் அளிக்கப்படும் பிரத்யேகக் கவனிப்புகளும், 'பரிகாரப் பூஜைதானோ?’ என்ற சந்தே கத்தையும் எழுப்பத்தான் செய்கிறது.

-எஸ்.ஷக்தி,  த.சித்தார்த்

படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு