Published:Updated:

`உண்மைதான் என்னுடைய ஒரே பாதுகாப்பு!’ - எம்.ஜே அக்பர் மீது குற்றம்சாட்டிய பிரியா ரமணி

`உண்மைதான் என்னுடைய ஒரே பாதுகாப்பு!’ - எம்.ஜே அக்பர் மீது குற்றம்சாட்டிய பிரியா ரமணி
`உண்மைதான் என்னுடைய ஒரே பாதுகாப்பு!’ - எம்.ஜே அக்பர் மீது குற்றம்சாட்டிய பிரியா ரமணி

`உண்மைதான் என்னுடைய ஒரே பாதுகாப்பு!’ - எம்.ஜே அக்பர் மீது குற்றம்சாட்டிய பிரியா ரமணி

``தன்மீது பாலியல் குற்றம் சுமத்திய பிற பெண்களை மிரட்டி அமைதிப்படுத்தியுள்ளார் அமைச்சர் எம்.ஜே அக்பர்'' என பிரியா ரமணி தெரிவித்துள்ளார். 

பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர்தான் #MeToo மூலம் முதல்முதலில் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து பல பெண்களும் அமைச்சர் மீது புகார் தெரிவிக்கத் தொடங்கினர். மத்தியில் ஆளும் கட்சியில் உள்ள ஒரு அமைச்சர் மீது தொடர் பாலியல் வன்கொடுமை புகார் கூறப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

``என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது, கற்பனையானது. அடிப்படை ஆதாரமற்றது. தற்போது, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவது வைரல் காய்ச்சல்போல் பரவியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எனது வழக்கறிஞர்களை ஆலோசித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன்” என அமைச்சர் அக்பர் நேற்று முன்தினம் விளக்கமளித்திருந்தார். மேலும், தன் மீது குற்றம் சுமத்திய பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள 97 வழக்கறிஞர்களும் வாதாடவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், இது பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் பிரியா ரமணி. ``பல பெண்கள் அவர் மீது அளித்துள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க அரசியல் சதி நடக்கிறது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் அக்பர் அவர் முடிவைத் தெளிவாக எடுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் பல பெண்கள் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால், அவர்களை மிரட்டிப் பல விஷயங்களை வெளியில் சொல்லாதபடி செய்துவருகிறார். உண்மை மற்றும் முழுமையான உண்மை மட்டுமே என் ஒரே பாதுகாப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து இது பற்றி ஸ்க்ரோல் ஆங்கில ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ள பிரியா ரமணியின் கணவர், ``என் மனைவி பிரியா, அமைச்சர் உட்பட அவர் நியமித்துள்ள 97 வழக்கறிஞர்களையும் முறியடித்து நீதிக்காகப் போராடுவார்” என குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு