Published:Updated:

கையெழுத்துப் போட வந்தவர்கள் வெட்டிக் கொலை: பூம்புகாரில் பயங்கரம்

கையெழுத்துப் போட வந்தவர்கள் வெட்டிக் கொலை: பூம்புகாரில் பயங்கரம்
கையெழுத்துப் போட வந்தவர்கள் வெட்டிக் கொலை: பூம்புகாரில் பயங்கரம்

பூம்புகார்: போலீஸ் ஸ்டேஷனுக்கு நிபந்தனை ஜாமீன் கையழுத்துப் போட வந்த இருவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பூம்புகாரில் பதற்றம் நிலவுகிறது.

பூம்புகார் அருகே உள்ள மேலையூரைச் சேர்ந்த தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராஜேந்திரன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கொலையாளிகள் நான்கு பேர் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார்கள்.

##~~##
இன்று காலை பத்து மணிக்கு  கையெழுத்து போடுவதற்காக அவர்கள் நால்வரும் பூம்புகார் போலீஸ் ஸ்டெஷனுக்கு வந்தார்கள். அப்போது, அங்கே அவர்களை எதிர்பார்த்து காத்திருந்த ஒரு கும்பல், ஆயுதங்களுடன் போலீஸ் ஸ்டேஷ‌னுக்குள் புகுந்து  விரட்டிய‌து. ஸ்டேஷ‌னுக்குள்ளேயே அந்தக் கும்பலிடம் மாட்டிக்கொண்ட ராஜேந்திரனை மூவர் குழு சுற்றி வளைத்து வெட்டிக் கொன்றது.
தப்பி ஓடியவர்களை விரட்டிச் சென்ற இன்னொரு குழு தருமகுளம் என்ற இடத்தில் எம்.ஆர்.டி ரவி என்பவரை வளைத்து வெட்டிகொன்று தலையில் கல்லை தூக்கிப்போட்டு சிதைத்துவிட்டு பறந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களும் கொலையாளிகளும்  இரண்டு முக்கிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் பூம்புகார் பகுதியை கலவர அபாயம் சூழ்ந்திருக்கிறது.

கரு.முத்து