Published:Updated:

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; உயிருக்கு போராட்டம்!

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; உயிருக்கு போராட்டம்!
டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; உயிருக்கு போராட்டம்!
டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; உயிருக்கு போராட்டம்!

புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், அண்டை வீட்டு நபரால் 4 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருகிறாள்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், 4 மாதங்களில் மேலும் பல பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் உலுக்கி உள்ளது.

 பாதிக்கப்பட்ட சிறுமி, தான் வசித்து வரும் வீட்டின் தரைதளத்தில் விளையாட சென்றபோது, தரை தளப்பகுதியில் வசித்துவந்த நபர் சிறுமியை வீட்டிற்குள் அடைத்து வைத்து கடந்த 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சம்பவம் நிகழ்ந்த 40 மணி நேரம் கழித்தே அச்சிறுமியின் அழுகுரலை கேட்டு அவளது குடும்பத்தினர் நேற்று மாலை கண்டுபிடித்தனர். படுகாயத்துடன், மயக்கமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அச்சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அடுத்த 48 மணி நேரங்கள் அபாயகரமானது என்று கூறியுள்ளனர்.

மேலும் சிறுமியின் கன்னம், உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதோடு, கழுத்திலும் கயிற்றை இறுக்கி கொல்ல முயன்றதற்கான வடு காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

##~~##
அதைவிட அதிர்ச்சியளிக்கும் விதமாக அச்சிறுமியின் பிறுப்புறுப்பில் 200 மி.லி. பாட்டில், இரண்டு மூன்று மெழுகுவர்த்தி துண்டுகள் உள்ளே நுழைக்கப்பட்டிருந்ததாகவும், 5 வயது சிறுமி ஒருத்தி இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டிருப்பதை தான் இப்போதுதான் பார்ப்பதாகவும், சிறுமி சிகிச்சை அளிக்கும் சுவாமி தயானந்த் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே. பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

இந்நிலையில் சிறுமியின் நிலை மோசமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக ( எய்ம்ஸ் - AIIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை

இதனிடையே சிறுமியை சீரழித்த குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பணம் கொடுத்து குற்றத்தை அமுக்க முயன்ற போலீஸ்

இதனிடையே முதலில் தாங்கள் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் கொடுக்க முயன்றபோது, அவளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும், இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று சிறுமியின் தந்தைக்கு போலீஸ்காரர் ஒருவர் 2000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

போராடிய பெண்ணை  கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; உயிருக்கு போராட்டம்!



இந்நிலையில் இதனிடையே இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இளம் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை பார்க்க கிழக்கு டெல்லி எம்.பி. சந்தீப் தீட்சித் மற்றும் மாநில சுகாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா ஆகியோர் வந்தனர்.

போராட்டகாரர்கள் அவர்களை முற்றுகையிட்ட நிலையில்,  போலீஸை கண்டித்து முழக்கம் எழுப்பிய இளம்பெண் ஒருவரை அங்கு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் அகலாவாத் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

இதனை தொலைக்காட்சிகள் படம்பிடித்து ஒளிபரப்பியதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதில் தலையிட்டது. இதனையடுத்து அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பத்தை கண்டித்து டெல்லி காவல்துறைக்கு எதிராகவும், முதல்வர் ஷிலா தீட்சித்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.