Published:Updated:

நிலக்கல்லில் போலீஸும் பக்தர்கள் அமைப்பினரும் கடும் மோதல்! சபரிமலையில் பதற்றம்

நிலக்கல்லில் போலீஸும் பக்தர்கள் அமைப்பினரும் கடும் மோதல்! சபரிமலையில் பதற்றம்
நிலக்கல்லில் போலீஸும் பக்தர்கள் அமைப்பினரும் கடும் மோதல்! சபரிமலையில் பதற்றம்

சபரிமலைக்குப் பெண்கள் வருகிறார்களா என கார்கள், பஸ்களில் சோதனை நடத்திய பக்தர்கள் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்தர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கிறது. இந்த நிலையில் சபரிமலைக்கு இளம் பெண்கள் வருகிறார்களா என்று கண்காணிக்க பக்தர் சங்கங்கள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு நாள்களாக நிலக்கல்லில் முகாமிட்டு வாகனங்களை சோதனை நடத்தி வந்தனர். சென்னையைச் சேர்ந்த தம்பதி, பெண் செய்தியாளர்கள் 5 பேர் மீது என பக்தர்கள் அமைப்பினர் தாக்குதல் தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை நிலக்கல் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இந்த நிலையில் கார்கள், பேருந்துகளில் இளம் பெண்கள் இருக்கிறார்களா எனப் பக்தர் சங்கங்களைச் சேர்ந்த பெண்கள் இன்றும் சோதனையில் ஈடுபட்டனர். இன்று மாலை வாகனங்களில் சோதனை செய்த பக்தர்களிடம் திடீரென காவல் துறையினர் கெடுபிடிகாட்டினர். பக்தர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல் துறையினர் சில பக்தர்கள் மீது தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நிலக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.