Published:Updated:

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்! பொறிவைத்துப் பிடித்த ராணுவம்

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்! பொறிவைத்துப் பிடித்த ராணுவம்
வாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்! பொறிவைத்துப் பிடித்த ராணுவம்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்ததாக உத்தரப்பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 


உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் கன்டோன்மென்ட்டில் பணிபுரிந்துவரும் வீரர் ஒருவர் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு இந்திய ராணுவம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாக ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவுனருக்குப் புகார் சென்றிருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்னர் சென்ற புகாரை அடுத்து, ராணுவத்தின் உளவுப் பிரிவினர் குறிப்பிட்ட அந்த வீரரைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.  அந்த வீரர், ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்டவை மூலம் கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவினர், அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளாக ராணுவத்தில் பணிபுரியும் அந்த வீரர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அந்த வீரரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை ராணுவம் இதுவரை வெளியிடவில்லை.