Published:Updated:

’வேன் டிரைவருடன் கூட்டுச் சேர்ந்த 6 பேர்.. சிறுமிக்கு நேர்ந்த துயரம்!’- மத்தியப்பிரதேச அதிர்ச்சி

representation image
representation image

மத்தியப்பிரதேசத்தில் வேன் டிரைவரால் சிறுமிக்கு நேர்ந்த துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் பள்ளிக்குச் சென்ற சிறுமியைக் கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஜாப்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Representation Image
Representation Image

சிறுமி வழக்கமாகச் செல்லும் வேனின் டிரைவர் சிறுமியைக் கடத்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 நபர்களைக் கைது செய்த மத்தியப்பிரதேச போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``13-வயதுச் சிறுமி பள்ளி முடிந்து மாலை 4.30 மணிக்கு ஸ்கூல் வேனில் வீடு திரும்பியுள்ளார். வழக்கமாகச் செல்லும் பாதையிலிருந்து ஓட்டுநர் அஜய் காதி வேறுபாதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு சிறுமியைத் தாக்கியுள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காத்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய திட்டுமிட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

கைது
கைது

பயன்பாடற்ற வீட்டில் வைத்து சிறுமியை வேன் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 7 நபர்களையும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு