Published:Updated:

இறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்? - நண்பரின் பேட்டி

இறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்? - நண்பரின் பேட்டி
இறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்? - நண்பரின் பேட்டி

இறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்? - நண்பரின் பேட்டி

முறையற்ற உறவுக்காகப் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல், கொன்ற சென்னைக் குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமியின் எபிசோடு முடிவதற்குள், அதேபோன்று கட்டிய கணவனை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி, அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள அனிதா என்ற இளம்பெண் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.  

சென்னை திருவான்மியூர் நியூ பீச் கடற்கரையில் கணவர் கதிரவனுடன் கண்ணாமூச்சி விளையாடினார் அனிதா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அனிதா காதலன் அந்தோணி ஜெகன் மூலம் கதிரவனைக் கொடூரமாகத் தாக்கினார். இந்த வழக்கில் அனிதாவும் அந்தோணி ஜெகனும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற கதிரவன் இறந்துபோனார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்த நிலையில், தன் மகனை இழந்த துயரத்தில் மிகுந்த மனவேதனையில் உள்ளனர், கதிரவனின் பெற்றோர். அவர்களைத் தொடர்புகொண்டபோது, கதிரவனின் தந்தையுடைய நண்பர் குழந்தை நம்மிடம் பேசினார். ``மேட்ரிமோனியல் மூலமாக வரன் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் இது. இந்தத் திருமணம் நடந்ததிலிருந்தே மகிழ்ச்சி இல்லாமல் இருந்துவந்துள்ளார் அனிதா. இந்த விஷயத்தை, கதிரவனும் பெற்றோர்களிடமிருந்து மறைத்துள்ளார். 'புது வீடு, புது மனிதர்கள் என்பதால் அனிதா இப்படியிருக்கிறார். நாளை சரியாகிவிடுவார். நாளை மறுநாள்  சரியாகிவிடுவார்' என அவரும் நம்பியுள்ளார். ஆனாலும், ஒருசில நாள்களில் இந்த விஷயம் சரியாகாத நிலையில், சென்னை வந்தபிறகு சரியாகி விடும் என்று இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான், திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துள்ளார். மனைவியின் அழைப்பைக் கண்டு மகிழ்ந்துபோன கதிரவன், இதுகுறித்து தன் அம்மாவிடம் தொலைபேசி மூலம் அந்தத் தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அப்போது அவர் அம்மாவிடம், 'அனிதா  மகிழ்ச்சியாக இல்லாததால் இதுவரை நாங்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடவில்லை. இனி எல்லாம் சரியாகிவிடும்' என்று கூறியுள்ளார். இந்த நிலையில்தான், அப்பாவியான அந்தக் கதிரவனைக் கொலை  செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறார் அனிதா. ஏற்கெனவே அந்தப் பெண்ணுக்கு இருந்த காதல், அவருடைய வீட்டுக்குத் தெரிந்திருக்கிறது. இதை மறைத்துதான் கதிரவனுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். அனிதா செய்த சதிச் செயலால், அவரை ஜாமீனில் எடுக்கக்கூட அவருடைய பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்" என்றார். 

இதுகுறித்து பேசிய உளவியலாளர் சித்ரா,``பொதுவாக  மனிதனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் வெளியே தெரிந்துவிடுகிறது. அதற்கு நாம் சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டால் அந்தப் பிரச்னை வெளியில் தெரியாது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாது. அபிராமி, அனிதா இந்த இரண்டு பெண்கள் செய்த கொலைகளுமே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில்தான் நடந்துள்ளது. அதற்காக இரண்டும் ஒன்று எனச் சொல்லிவிட முடியாது. அபிராமி கொலைத் திட்டமும், அனிதாவின் கொலைத் திட்டமும் முற்றிலும் மாறுபட்டவை. இருந்தாலும் இரண்டுமே கண்மூடித்தனமான உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்பது தெளிவாகிறது. ஒரு பெண் கல்யாணத்துக்கு முன்பாக இருந்தாலும், பின்பாக இருந்தாலும் பெரும்பாலும் ஓர் ஆணுடனான உறவை மட்டுமே மேம்படுத்த வேண்டும் என நினைப்பது பெண்ணின் இயல்பான விஷயமாகும். அதற்குத் தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அகற்ற வேண்டும் என்று நினைப்பதும்  அவர்களுடைய கேரக்டர் ஆகும். அந்த மல்டிபிள் கேரக்டரின் உச்சமான மனநிலையால்தான் இப்படியான மோசமான செயல்களைச் செய்கிறார்கள். 

ஆண்கள் அப்படி அல்ல... ஒரு மனைவியை வைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் உறவையும் வைத்துக்கொள்வார்கள். ஒரே  பெண்ணுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகக் கொலை செய்யும்வரை செல்லும் ஆண்கள் மிகக் குறைவு. ஆனால் அனிதா விவகாரத்தில், அவருடைய உறவுக்குத் தடையாக உள்ளவர்களை அகற்ற வேண்டும் என்ற உணர்ச்சியின் உச்சத்திலும் கொன்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் மற்றொரு கோணமும் உள்ளது. அனிதா காதலை அவளுடைய பெற்றோர்கள் நிராகரித்திருக்க வேண்டும். அதன் காரணமாக, அவருடைய பெற்றோர்களின் மீதிருந்த கோபம் கதிரவன் மீது திரும்பியிருக்கலாம்" என்றார், மிகத் தெளிவாக.    

அடுத்த கட்டுரைக்கு