Published:Updated:

வேலூர் ரஜினி மன்ற நிர்வாகி படுகொலை! (படங்கள்)

வேலூர் ரஜினி மன்ற நிர்வாகி படுகொலை! (படங்கள்)
வேலூர் ரஜினி மன்ற நிர்வாகி படுகொலை! (படங்கள்)

வேலூர்: வேலூர் நகர ரஜினி மன்ற நிர்வாகியும், தொழிலதிபரும், பிரபல ரவுடியுமான ஜி.ஜி.ரமேஷ் நேற்றிரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

வேலூர் ரஜினி மன்ற நிர்வாகி படுகொலை! (படங்கள்)

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அ.தி.மு.க.விலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ஜி.ஜி.ரவி. இவர் வேலூரில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, ராவணன் தன்னைத் தாக்கினார் என்று எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். முதல்வர் ஜெயலலிதா சொல்லிதான் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில், இவர் தம்பியான ஜி.ஜி.ரமேஷ் நேற்றிரவு மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். வேலூர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த இவர் மீது பல கொலை வழக்குகளும், பல கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடிதடி வழக்குகளும் உள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலூர் - ஆற்காடு சாலையில் ஒருவரை வெட்டியதாக வழக்கு விசாரணை நடந்து வந்துள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை பி.ஆர்.ஓ. படுகொலை வழக்கில் கைதான மகா என்ற ரவுடிக்கும், இவருக்கும் ஏற்கனவே பல வருடங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. மகாவின் ஆதரவாளர்கள்தான் ஜி.ஜி.ரமேஷை கொலை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர் தொழிலதிபர் என்பதாலும், பிரபல ரவுடி என்பதாலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக வேலூர் நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.