Published:Updated:

மாணவியை கற்பழிக்க முயன்ற முன்னாள் தலைமையாசிரியர் கைது!

மாணவியை கற்பழிக்க முயன்ற முன்னாள் தலைமையாசிரியர் கைது!
மாணவியை கற்பழிக்க முயன்ற முன்னாள் தலைமையாசிரியர் கைது!

ஸ்ரீவில்லிப்புத்தூர்: வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் எலக்ட்ரிஷனாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் மதுமிதா (பெயர் மாற்றம்), அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் நடந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார்.

வ.புதுப்பட்டி, மன்னர் திருமலை தெருவை சேர்ந்தவர் வெங்கடசாமி என்ற ஆத்மநாபன் (64). இவர் அதே தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அவர்களுக்கும் 10 வயதில் மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வெங்கடசாமி தனது தோட்டத்தில் உள்ள பம்பு செட்டை ரிப்பேர் செய்வதற்காக ஜனார்த்தனன் வீட்டுக்கு நேற்று மாலை சென்றார். அப்போது பள்ளி மாணவி மதுமிதாவின் தந்தை ஜனார்த்தனன், தாயார் லட்சுமி ஆகியோர் வீட்டில் இல்லை. மாணவி மதுமிதாவிடம், ‘உன் அப்பா எங்கே?’ என்று கேட்டிருக்கிறார் வெங்கடசாமி. ‘அவர்கள் வெளியே போய் இருக்கிறார்கள்’ என்று மதுமிதா சொல்லவும், ‘ரொம்பவும் தாகமாக இருக்கிறது, குடிக்க தண்ணீர் வேண்டும்’ என்று கேட்கவும், வெங்கடசாமியை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்துவிட்டு மாணவி மதுமிதா சமையல் அறைக்குள் தண்ணீர் கொண்டு வர சென்றார்.

##~~##
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற வெங்கடசாமி திடீரென்று மாணவி மதுமிதாவின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே மதுமிதா வெங்கடசாமியின் கையை கடித்துவிட்டு, தப்பி தெருவுக்கு வந்து ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ‘என்ன பிரச்னை?’ என்று விசாரித்தனர், இதை அறிந்த வெங்கடசாமி வேகமாக தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.
விசயம் வெளியே தெரியவும் ஜனார்த்தனின் உறவினர்கள் வெங்கடசாமி வீட்டுக்கு சென்று அவரை அடித்து உதைத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வெங்கடசாமி மீது கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வி.என்.ஆர்.கார்த்தி