Published:Updated:

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஜனாதிபதி கண்டனம்

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஜனாதிபதி கண்டனம்
சிறுமி பாலியல் வன்கொடுமை: ஜனாதிபதி கண்டனம்
சிறுமி பாலியல் வன்கொடுமை: ஜனாதிபதி கண்டனம்

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவத்தின் பாதிப்பில் இருந்து சிறுமி விரைவில் குணமடைய, அவரின் பெற்றோருடன் இணைந்து இறைவனிடம் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் தமது அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

##~~##
இந்த மாதிரியான வன்புணர்ச்சி சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது நல்லதல்ல என்று கூறியுள்ள  பிரணாப் முகர்ஜி, குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டும்படி கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாதிரியான குற்றங்களை நம் சமுதாயம் ஒற்றுமையுடன் இணைந்து களைய வேண்டும் என்றும் குடியரசு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.