Published:Updated:

``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm

``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm
``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm

பே டிஎம் என்னும் பண பரிவர்த்தனை செய்யும் சேவைச் செயலி இன்று இந்தியா முழுவதும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா. இவரிடம் 10 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் சோனியா தவான்.

இவர் தன்னுடைய வேலை காரணமாக விஜய் சேகர் ஷர்மாவினுடைய அலைபேசி, கணினி என அனைத்தையும் கையாண்டு வந்திருக்கிறார். அப்போது அவரது தனிப்பட்ட கோப்புகள் சிலவற்றைத் திருடி, தன்னுடைய கூட்டாளி ரோஹித் சோமல் என்பவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தச் செயலில் சோனியாவின் கணவர் ரூபக் ஜெயினுக்கும் சோனியாவுடன் அதே அலுவலகத்தில் பணிபுரியும் தேவேந்திர குமார் என்பவருக்கும் கூட்டு இருந்திருக்கிறது. இதையடுத்து, திருடப்பட்ட ஆவணங்களை வைத்துக்கொண்டு விஜய் சேகர் ஷர்மாவுக்கு கடந்த மாதம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ரோஹித் சோமல், 10 கோடி ரூபாய் தராவிட்டால், அவற்றை வெளியே கசியவிடப்போவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் அந்த நிறுவனத்துக்கு அவப் பெயர் ஏற்படும் என்றும் மிரட்டி இருக்கிறார். பின்னர் பணயத் தொகையாக 20 கோடி ரூபாய் கேட்டு விஜய் சேகர் ஷர்மாவை மிரட்டி இருக்கின்றனர்.

இதுகுறித்து அவர் காவல் துறையிடம் புகார் அளிக்கவே, சம்பந்தப்பட்ட நால்வரையும் போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர். இதில் ரோஹித் சோமல் என்பவர் மட்டும் தலைமறைவாகி இருப்பதாகப் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்ட பே டிஎம்  நிறுவனம், அவர்களின் ஊழியர் இருவர் உட்பட மூவர் கைதாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.