Published:Updated:

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி!

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி!

காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல், பிரபாகரன் என்ற கைதி நீதிமன்ற வாயிலில் தான்கொண்டுவந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பல்லர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர்மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் கூட்டுச்சதி செய்ததாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வேலூர் சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் பிரபாகர், சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திவந்தது தெரியவந்தது. இதனால் விசாரணைக்காக காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்செய்து, அவரை சிறைக்குக் கொண்டுசெல்ல வெளியே கொண்டுவந்தனர். அப்போது, நீதிமன்ற வாயிலிலேயே சட்டைக் காலரில் மறைத்துவைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் உடனே அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். கழுத்தில் தையல் போடப்பட்ட பின்பு, அவர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.