Published:Updated:

டெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கு: 2வது குற்றவாளி கைது

டெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கு: 2வது குற்றவாளி கைது
டெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கு: 2வது குற்றவாளி கைது

புதுடெல்லி: டெல்லி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2வது குற்றவாளியை பீகாரில்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் காந்திநகரில் கடந்த 15ஆம் தேதி 5 வயது சிறுமியை மனோஜ் என்ற வாலிபர் மற்றும் அவனது நண்பனும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.

##~~##
மயக்கமடைந்த சிறுமி இறந்துவிட்டதாக கருதிய இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.  பின்னர் ஏப்ரல் 17ஆம் தேதி 40 மணிநேரம் கழித்து சிறுமி மீட்கப்பட்டுள்ளாள்.
இந்த நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மனோஜ் பீகாரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறினார்.
இதையடுத்து, வழக்கில் 2வது குற்றவாளி பிரதீப்பை பிடிக்க பீகாருக்கு டெல்லி போலீசார் விரைந்தனர். இந்த நிலையில், தார்பசார் மாவட்டத்தில் பதுங்கி இருந்த பிரதீப்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.