Published:Updated:

மக்களவையில் முதல் நாளே அமளி; ஒத்திவைப்பு: எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

மக்களவையில் முதல் நாளே அமளி; ஒத்திவைப்பு: எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
மக்களவையில் முதல் நாளே அமளி; ஒத்திவைப்பு: எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
மக்களவையில் முதல் நாளே அமளி; ஒத்திவைப்பு: எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லி சிறுமி பலாத்கார சம்பவம் மற்றும் நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்பார்த்தபடியே எதிர்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், மம்தா பானர்ஜிக்கு எதிரான தாக்குதல், நிலக்கரி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை மற்றும் பல்வேறு ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பின.  இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

இந்நிலையில் பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜனதா உறுப்பினர்கள் அமளியில்  ஈடுபட்டதால், அவை மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், 2 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் மீராகுமாரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அமளி

##~~##

இதனிடையே மக்களவையில் ஏற்பட்ட அமளி போலவே  மாநிலங்கள் அவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கபட்டது.


எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்


இதனிடையே நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.