Published:Updated:

258 வழக்குகளில் 1,407 பேர் கைது! - சபரிமலையில் பெண்களைத் தடுத்ததால் கேரள போலீஸ் அதிரடி

258 வழக்குகளில் 1,407 பேர் கைது! - சபரிமலையில் பெண்களைத் தடுத்ததால் கேரள போலீஸ் அதிரடி
258 வழக்குகளில் 1,407 பேர் கைது! - சபரிமலையில் பெண்களைத் தடுத்ததால் கேரள போலீஸ் அதிரடி

சபரிமலையில் பெண்களைப் போகவிடாமல் தடுத்ததாக 258 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் 1,407 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

`சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்' என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட தினத்திலிருந்து, சமூக அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் செய்தியாளர்கள் எனச் சபரிமலைக்குச் செல்ல முயன்றார்கள். பத்தணம்திட்டாவில் லிபி என்ற இணையதளச் செய்தியாளர் தாக்கப்பட்டார். இதுபோன்று சபரிமலைக்கு வந்த பெண்களை பலபகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அனைத்துப் போராட்டங்களையும் காவல்துறையினர் வீடியோ மூலம் பதிவு செய்தனர். பதிவான காட்சிகளில் இருக்கும் நபர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து வருகின்றனர். இதுவரை 1,407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக எர்ணாகுளம் ரூரல் பகுதியில் 75 பேரும், திருப்பூணித்துறையில் 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்தணம்திட்டா, நிலக்கல், பம்பா, சந்நிதானம் ஆகிய 4 இடங்களிலும் பெண்களைத் தடுத்ததாக 210 பேருடைய புகைப்படங்களைக் காவல்துறையினர் ஏற்கெனவே வெளியிட்டனர். மேலும், புகைப்படங்கள் வெளியிடப்படும் எனக் காவல்துறையினர் அறிவித்த நிலையில் நேற்று இரவு முதல் கைதுசெய்யும் படலத்தில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே வெளியிட்ட 210 புகைப்படங்களில் பத்தணம்திட்டா ஆயுதப்படை முகாம் காவலர் இப்ராஹிம் குட்டி என்பவரது புகைப்படமும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறையின் சைபர் செல்லில் ஏற்பட்ட குளறுபடி என விளக்கமளிக்கப்பட்டது.