Published:Updated:

பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமல்ல...நாடு முழுவதும்தான் நடைபெறுகிறது: ஷிண்டே

புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, " பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமல்ல...நாடு முழுவதும்தான் நடைபெறுகிறது” என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், "டெல்லி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், அவள் காணாமல் போனது தொடர்பான புகாரை விசாரிப்பதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டினார்களா  என்பது குறித்தும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படுவது குறித்தும் அறிந்துகொள்ள டெல்லி காவல்துறையின் கண்காணிப்பு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

##~~##
சிறுமி வசித்த காந்தி நகர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரியும் ( Station House officer - SHO ), புலனாய்வு அதிகாரியும் ( Investigation Officer - IO ) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.