Published:Updated:

நான் பதவி விலகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை: டெல்லி போலீஸ் கமிஷனர்

நான் பதவி விலகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை: டெல்லி போலீஸ் கமிஷனர்
நான் பதவி விலகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை: டெல்லி போலீஸ் கமிஷனர்
நான் பதவி விலகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை: டெல்லி போலீஸ் கமிஷனர்

புதுடெல்லி: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்துக்காக தாம் பதவி விலகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கற்பழிப்பு சம்பவத்துக்காக நான் பதவி விலகுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. அப்படி நான் பதவி விலகினால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றால், இருந்தால் ஆயிரம் முறை பதவி விலக நான் தயாராக உள்ளேன்.

இத்தகைய சம்பவங்கள் மன அளவில் கொடூரமானவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. யார் ஒருவருடைய ராஜினாமாவாலும் இது நின்றுவிடப்போவதில்லை. இதுபோன்ற ஒவ்வொரு கொடூரங்களையும் போலீசாரால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? இதுபோன்ற வன்கொடுமைகள் 97 சதவிகிதம் தனியார் இடங்களில் அதுவும் வீடுகளில் வைத்து நடக்கிறது. வெறும் மூன்று சதவிகிதம் தான் வெளிநபர்களால் நடக்கிறது" என்றார்.

அப்போது நிருபர் ஒருவர் நீங்கள் ராஜினாமா செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு கமிஷனர் நீரஜ் குமார், 'நீங்கள் தவறாகன தகவல் வெளியிட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் பத்திரிகை ஆசிரியர் பதவி விலகிவிடுவாரா?" என்று எதிர்கேள்வி கேட்டார்.

##~~##
மேலும் அவர் பேசுகையில், "சம்பவம் தொடர்பாக காந்தி நகர் போலீசார் நடந்துகொண்டது தொடர்பாக புகார் வந்த சில மணி நேரங்களில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தை அமுக்குவதற்காக குழந்தையின் பெற்றோருக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க வந்த போலீஸ்காரர் யார் என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக வெளியான தகவலையும் கமிஷனர் மறுத்தார்.