Published:Updated:

‘23-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலையா?’-தீவிர விசாரணையில் காவல்துறை

‘23-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலையா?’-தீவிர விசாரணையில் காவல்துறை
‘23-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலையா?’-தீவிர விசாரணையில் காவல்துறை

மும்பையில் 16-வயது சிறுமி 23-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையின் தார்டுதேவ் பகுதியைச் சேர்ந்த நகை வியாரியான அம்ரிஷ் கோத்தாரி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இவர்கள் 60 மாடி கட்டடத்தில் குடி இருக்கின்றனர். இவர்களது வீடு 23-வது தளத்தில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று அம்ரிஷ் தொழில் நிமித்தமாக வெளியில் சென்று விட்டார். வீட்டில் அம்ரிஷின் மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் பெண் இருந்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் 10-ம் வகுப்பு பயிலும் அம்ரிஷின் மகள் குடியிருப்பு வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறுமி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை பார்த்த குடியிருப்பு வளாக பாதுகாவலர் இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுமி குறித்து விசாரிக்க அவரது புகைப்படத்துடன் காவல்துறையினர் அம்ரிஷின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சிறுமி உயிரிழந்த விவகாரம் தெரியவந்துள்ளது. சிறுமி 23-வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை முயன்றதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கூறுகையில்,  “ இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் புகைப்படத்தை கொண்டு அவரது வீட்டில் விசாரித்த போது சிறுமி உயிரிழந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தை நகை வியாபாரி சம்பவத்தன்று அவர் பணிநிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். சிறுமியின் தாய், சகோதரன் மற்றும் வீட்டில் பணிபுரியும் பெண் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். சிறுமியின் தாய் அளித்த தகவலின் படி சம்பவ நடைபெற்ற அன்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.இச்சம்பவம் குறித்த சரியான காரணம் தெரியவில்லை. அந்தக்குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். தற்கொலை கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவரது மொபைல் எண்களை ஆய்வு செய்து வருகிறோம். நண்பர்கள் குடும்பத்தினர்களிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்றார்.