Published:Updated:

கள்ளக்காதலியை அதிகாரிகளுக்கு விருந்து வைத்த டிரைவர் அடித்துக் கொலை

விருதுநகர்: தனது கள்ளக் காதலியை அதிகாரிகளுக்கு விருந்து வைத்த விருதுநகர் டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவர் மனோகரன் அடித்துக் கொல்லப்படார்.

விருதுநகரில் உள்ள இந்திராநகர் ஏரியாவைச் சேர்ந்தவர் மனோகரன் (45) டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அலுவலகம் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு திரும்பாததால் கலங்கிப் போன மனோகரனின் மனைவி திருச்செல்வி, மறுநாள் போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மனோகரனுக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மனோகரனின் செல்போன் தொடர்புகளை துருவிய போலீஸாருக்கு, பாண்டிச்செல்வி என்ற பெண்மணி மீது சந்தேகம் வலுத்தது. தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தும் ஆறுமுகத்தின் மனைவி பாண்டிச்செல்வியிடம் மனோகரன் அடிக்கடி செல்போன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆள் காணாமல் போய் நாற்பத்து நாட்கள் ஆன பிறகும் துப்புக் கிடைக்காததால், ஆறுமுகத்தையும் பாண்டிச்செல்வியையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றது போலீஸ்.

போலீஸ் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட இருவரும் தங்களது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் போலீஸ் வட்டாரத்தை உலுக்கிப் போட்டது. விவகாரம் வில்லங்கமானதால் மீண்டும் விசாரணையைத் தொடங்கிய போலீஸார், பாண்டிச்செல்வி, ஆறுமுகம், இவர்களோடு செல்வம் என்கிற நபரும் மனோகரன் காணாமல் போவதற்கு முன்பாக மதுரை அருகே சிவரக்கோட்டையில் சந்தித்துப் பேசிய விவரத்தை கண்டுபிடித்தார்கள்.

மனோகரன் காணாமல் போன விஷயத்தில் செல்வம் மீது சந்தேகப் பார்வையை திருப்பிய போலீஸ், அவரை உரிய முறையில் உட்கார வைத்து விசாரித்தது. விசாரணையில் செல்வம் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகம். ''ஆறுமுகம் எங்க அண்ணன் தான்.  மனோகரனுக்கும் அண்ணி பாண்டிச்செல்விக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுடுச்சு. தான் மட்டுமில்லாமல் தன்னுடைய அதிகாரிகள் சிலருக்கும் முந்தி விரிக்க வைச்சிட்டான். இந்த விஷயம் எங்கண்ணனுக்குத் தெரிஞ்சு ரொம்ப வருத்தப்பட்டு எங்கிட்ட சொன்னான். அதனால நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மனோகரனை போட்டுத்தள்ள பிளான் போட்டோம்.

 எங்க அண்ணி மூலமாகவே மனோகரனை சிவரக்கோட்டைக்கு வரச் சொல்லி செல்போன் மூலமாக அழைச்சோம். வரும்போது பிராந்தியையும் வாங்கிட்டு வரச் சொன்னோம்.  மனோகரனுக்கு தெரியாமலே பிராந்தியில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததும் அவன் மயங்கிட்டான். உடனே நாங்க ஒண்ணாச் சேர்த்து மனோகரனை அடிச்சுக் கொன்னுட்டோம். பிணத்தைச் சாக்கு மூட்டையில் கட்டி கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷன் எதிரே இருக்கிற சாக்கடையில் வீசிட்டு கிளம்பிட்டோம்.  போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சதும் மாட்டிக்குவோமோன்னு பயந்து அண்ணனும் அண்ணியும் தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க"  ஆறுமுகம் இப்படி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவரை கைது செய்த போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த மனோகரனின் பிணத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த டிரைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் விருதுநகர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த வழக்கை இன்னும் ஆழமாக விசாரித்தால் இன்னும் பல மர்மங்கள் வெளிக் கிளம்பும் போலிருக்கிறது!
 
 எம். கார்த்தி