Published:Updated:

டெல்லி போராட்டம்: மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது!

புதுடெல்லி: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் மீது டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகம் அருகே தாக்குதல் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் இந்திய மாணவ அமைப்பை சேர்ந்த ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் சாதாரணமானது என மம்தா கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் டெல்லி சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கு வந்தபோது, இந்திய மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.  இதில் அமைச்சரின் சட்டை கிழிந்ததுமேலும் தன் மீதும் தாக்குதல் நடந்ததாக மம்தா கூறியிருந்தார்.

##~~##
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய மாணவ அமைப்பின் பொதுச் செயலாளர் ரீட்டாபிரதா பந்தோபாத்யாய் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.