Published:Updated:

ஆருஷி கொல்லப்பட்டது எதிர்பாராத விபத்து: சிபிஐ

புதுடெல்லி: இளம் பெண் ஆருஷி கொல்லப்பட்டது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என்றும், ஆருஷியுடன் உடனிருந்த விட்டு வேலைக்காரனை அவரது தந்தை அடித்த அடி தவறுதலாக ஆருஷி மீது பட்டுவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

டெல்லி அருககே உள்ள நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் ஆருஷி, வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரி ஏஜிஎல் கௌல், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது, கடந்த 2008 ஆம் ஆண்டு, இரவு, தனது மகள் ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜூம் அன்யோன்யமாக இருந்ததைப் பார்த்த ராஜேஷ் தல்வார், ஹாக்கி ஸ்டிக்கால் ஒரு முறை ஹேம்ராஜை தாக்கினார். அடுத்த முறை அவரை தாக்க முயன்ற போது அது தவறுதலாக ஆருஷி மீது பட்டது. இதனால் இருவரும் உயிரிழந்தனர்.

##~~##
அதன் பிறகுதான், ஆருஷியின் தாய் நுபுர் தல்வார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கொலையை மூடி மறைக்க முயன்றுள்ளனர். ஆதாரங்களை அழித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதில், அவரது உறவினர்கள் இருவரும் உடந்தையாக செயல்பட்டுள்ளதகாவும் கௌல் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் மூத்த அதிகாரிகள் தலையீடு

இதனிடையே வழக்கு விசாரணையில் மூத்த அதிகாரிகள் தலையிடுவதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாகவும் விசாரணை அதிகாரியான கௌல் பரபரப்பான தகவலை வெளியிட்டார். இவ்வழக்கு தொடர்பாக இன்று கவுல் கூறும்போது, உயர் அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

‘நூபுர் தல்வாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்தும், அவரைக் கைது செய்யக்கூடாது என்று உயர் அதிகாரி என்னை தடுத்துவிட்டார்’ என்று அவர் கூறினார். இதனால் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.