Published:Updated:

சென்னையில் பட்டப்பகலில் சாமியார் வெட்டிக்கொலை!

சென்னையில் பட்டப்பகலில் சாமியார் வெட்டிக்கொலை!
சென்னையில் பட்டப்பகலில் சாமியார் வெட்டிக்கொலை!
சென்னையில் பட்டப்பகலில் சாமியார் வெட்டிக்கொலை!

சென்னை: கோயில்களில் குறி சொல்லும் சாமியார் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளை சி.கே.பி. கோவில் தெருவைச் சேர்ந்த ஜானகிராமனுக்கு (45), இந்திரா என்ற மனைவியும், பாலாஜி (14), மாதவன் (11) என்ற மகன்களும் உள்ளனர். பெரியபாளையம் பவானி அம்மனின் தீவிர பக்தரான ஜானகிரான், தனது வீடு அருகே பவானி அம்மன் கோவில் கட்டி குறி சொல்லி பிழைப்பு நடத்தி வந்ததோடு, அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார்.

இவரிடம் குறி கேட்க ஏராளமான பக்தர்கள் வந்ததால் அவரை பாட்ஷி சுவாமிகள் என்று பக்தர்கள் அழைத்தனர். பெயருக்கு ஏற்றார் போல் ஜடாமுடி தரித்து இருந்தார்.

சித்ரா பவுர்ணமியை யொட்டி இன்று பாட்ஷி சுவாமிகள் தான் கட்டிய பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். நடராஜா தியேட்டர் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் இருந்து பவானி அம்மன் கோவிலுக்கு இன்று மாலை பால்குட ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய இருந்தார். இதற்காக பெரிய அளவில் சுவரொட்டிகள் அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.

##~~##
இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பாட்ஷி சுவாமிகள் வெளியில் சென்று பால் வாங்கி வந்தார். பின்னர் காலை 7 மணி அளவில் டீ குடிக்க அருகில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயம் அடைந்த பாட்ஷி சுவாமி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சாய்ந்தார்.
பட்டப்பகலில் நடந்த படுகொலையை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் பாட்ஷி சுவாமிகள் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலம் வாங்கியதில் இவருக்கும், அவரது நண்பர் ஒருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலத்தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னையில் பட்டப் பகலில் சாமியார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.