Published:Updated:

`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்!

`சான்றிதழ் கொடுக்க  ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்!
`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்!

பிறப்புச் சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைக்கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, சுகாதார ஆய்வாளராகப் பணிபுரியும் மனோகரன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ரூ.200 முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒருவரிடம் ரூ.200 லஞ்சம் பெற்றுக்கொண்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளார். மனோகரன் பணம் வாங்கிய காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சுகாதார ஆய்வாளர் மனோகரன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதன் பின்னர், திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் தேவபார்த்தசாரதி உத்தரவின்பேரில் மனோகரன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ‘புதூர்நாடு கிராமத்தில் மீண்டும் மனோகரன் பணியமர்த்தப்படக் கூடாது. அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்’ எனக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.