Published:Updated:

பெண்களைக் கவர வாலிபர் செய்த காரியம்! - அதிர்ந்துபோன போலீஸ்

பெண்களைக் கவர வாலிபர் செய்த காரியம்! - அதிர்ந்துபோன போலீஸ்
பெண்களைக் கவர வாலிபர் செய்த காரியம்! - அதிர்ந்துபோன போலீஸ்

பெண்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக ஆந்தையைக் கொடூரமாக கொன்ற நபரை போலீஸ் கைது செய்துள்ளது. 

டெல்லி சுல்தான்பூரி பகுதியைச் சேர்ந்தவர் கன்ஹயா. 40 வயதாகும் இவர் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். விலங்குகள் நல வாரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக கன்ஹயா செய்த காரியம்தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். பில்லி சூனியத்தில் ஈடுபாடு கொண்ட அவர், ஒரு பெண்ணை விரும்பியதாகவும் அவரைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக ஆந்தையைக் கொன்று பரிகாரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸின் விசாரணையில் பதிலளித்த அவர், ``நான் விரும்பிய பெண்ணைக் கவர வேண்டும் என்பதற்காகவே ஆந்தையைக் கொன்றேன். பில்லி சூனிய சடங்குகள் நடைமுறையில் ஆந்தையைக் கொன்றால் பெண்களைக் கவர முடியும் என சமூகவலைதளத்தில் வீடியோ பார்த்தேன். அதன்பிறகு நானும் அப்படிச் செய்யலாம் என்று ஆந்தையை வாங்கி வந்தேன்" எனக் கூறியுள்ள அவர், தான் பார்த்த வீடியோவையும் போலீஸுக்கு காண்பித்துள்ளார்.

முன்னதாக, பில்லி சூனிய முறைப்படி ஆந்தையை மிகவும் கொடூரமான முறையில் கொலையும் செய்துள்ளார். இதற்கான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். கன்ஹயாவுக்கு ஆதரவாக மொத்தக் குடும்பமும் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக கன்ஹயாவை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் ஆந்தை எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.