Published:Updated:

சி.பி.ஐ. அறிக்கையால் நெருக்கடி: பிரதமர் அவசர ஆலோசனை!

சி.பி.ஐ. அறிக்கையால் நெருக்கடி:  பிரதமர் அவசர ஆலோசனை!
சி.பி.ஐ. அறிக்கையால் நெருக்கடி: பிரதமர் அவசர ஆலோசனை!
சி.பி.ஐ. அறிக்கையால் நெருக்கடி:  பிரதமர் அவசர ஆலோசனை!

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமாரும் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினரின் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை, பிரதமர் அலுவலகம் மற்றும் 2 மத்திய அமைச்சர்களுடன் பகிர்ந்துகொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், தனது பதவியை தவறாக பயன்படுத்தி சி.பி.ஐ. விசாரணையில் தலையிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ள பா.ஜனதா, நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை திருத்தியதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
 

##~~##
இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், இது குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பதவி விலகப்போவதில்லை: அஸ்வினி குமார்
இதனிடையே இவ்விவகாரத்தில் உண்மை வெல்லும் என்றும்,  நான் எதுவும் தவறாக செய்யவில்லை என்றும் கூறியுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சோனியா ஆதரவு
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அஸ்வினி குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.அதேப்போன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத்தும், இவ்விவகாரம் தொடர்பாக சட்டதுறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.