போலி ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.400 கோடி வரை கொள்ளை நடந்த வழக்கில், உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கில் வழக்கு திசை திருப்பப்படுவதாக புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறைமீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரியில் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி, அதன்மூலம் போலி ஏ.டி.எம் அட்டைகளைத் தயாரித்து சுமார் ரூ. 400 கோடி வரை கொள்ளையடித்த கும்பலை, கேரள போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீஸ் மடக்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில், 11 பேர் கைது செய்யப்பட்டனர். “தலைமறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளிகளான அ.தி.மு.க பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்தியா ஆகியோரைத் தேடிவருகிறோம்” என்றது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இது பற்றி 20.05.2018 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்தியா கைது செய்யப்பட்டார்.

“இந்தக் குற்றத்தில் மூளையாகச் செயல்பட்டவர் சந்துருஜி. சுமார் 90 சிம் கார்டுகளைப் பயன்படுத்திவரும் அவர், அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட சர்வதேசக் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அவரைச் சல்லடை போட்டுத் தேடிவருகிறோம்” என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் சொன்னது. அப்போது, “எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. இதை, சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்று கூலாகப் பேசித் தன் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை சந்துருஜி வெளியிட்டார். அதன் பிறகு, சந்துருஜியைத் தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்தது.

புதுச்சேரி மாநில பி.ஜே.பி தலைவரும், நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன், “சுமார் 400 கோடி ரூபாய் வரை பொதுமக்களின் பணத்தைப் போலி ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளையடித்துள்ளனர். அரசியல் பின்னணியுடன்தான் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடனும், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் சந்துருஜி நெருக்கமாக இருந்துள்ளார். இவர்களுக்கும் சந்துருஜிக்கும் வங்கி மூலம் பணப் பறிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, இது பற்றிய விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தியுள்ளோம். அதை முதல்வர் நாராயணசாமி கண்டுகொள்ள வில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினால், தன் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் முதல்வருக்கு உள்ளது. அதனால், குற்றவாளியைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபடுகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய கோயம்புத்தூரைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்யா, அமெரிக்கா, இத்தாலி என்று சர்வதேச அளவில் தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. சாதாரணத் திருட்டு வழக்குகளில்கூடக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத புதுச்சேரி போலீஸால், சர்வதேச அளவிலான இந்தக் கொள்ளையை நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. இவ்வளவு பெரிய வழக்கில் கவர்னர் கிரண்பேடியும் தலையிடாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது” என்றார்.

“முக்கியக் குற்றவாளி சந்துருஜிக்கும், அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததும் வழக்கின் தன்மையே மாறிவிட்டது. விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதுவரை இந்த வழக்கின் புகார்தாரர்கள் எத்தனை பேர் என்று காவல்துறை வெளிப்படையாகத் தெரிவிக்க வில்லை. சாதாரணத் திருட்டு வழக்கில்கூட, சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் பெற்றோர், உறவினர்களை விசாரணை என்ற பெயரில் துளைத்தெடுக்கும் போலீஸார், முக்கியக் குற்றவாளி என்று இவர்களே தெரிவித்த ஒருவரின் பெற்றோர்களை உடனே விசாரிக்கவில்லை. மாறாக, ஒரு மாதத்திற்குப் பிறகு, ‘அவர்கள் தலைமறைவாகி விட்டனர்’ என்று தெரிவிக்கின்றனர். சந்துருஜியுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று வந்துள்ளனர் என்றும் புகைப்பட ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. அந்த எம்.எல்.ஏ ஏன் விசாரிக்கப் படவில்லை? தான் பேசிய வீடியோ ஒன்றை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பின், அதில் இருந்த அனைத்துப் போட்டோக்களையும் அழித்த சந்துருஜி, சிலருடன் இருக்கும் போட்டோக்களை மட்டும் அழிக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? சர்வதேச அளவில் தொடர்பில் இருந்த சந்துருஜிதான் அனைத்துக்கும் காரணம் என்று சொல்லிவந்த இவர்கள், தற்போது திடீரெனக் கோவையைச் சேர்ந்த பீட்டர், தினேஷ், இர்பான் என்ற ரகுமான் ஆகிய மூவரைக் காட்டி, இவர்கள் முக்கியக் குற்றவாளிகள் என்று சொல்லி சந்துருஜியை டம்மியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். இரண்டு மாதங்களைக் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை” என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் நாம் கேட்டபோது, “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பி.ஜே.பி-யினர் இப்படியான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யார் தவறு செய்தாலும் அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும். தமிழகக் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இந்த வழக்கை எங்கள் ஆட்சியில் புதுச்சேரி காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. அரசியல்வாதி, அரசு அதிகாரி உள்பட இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், நாங்கள் அவர்களை விடமாட்டோம்.

பி.ஜே.பி-யினர் விவரம் தெரியாமல் பேசுகிறார்கள். முக்கியக் குற்றவாளியான சந்துருஜியைப் பிடிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்றார்.

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்