Published:Updated:

கர்நாடக ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தமிழகத் தம்பதியின் உடல்கள்! - ஆணவக் கொலையால் அதிர்ந்த கிருஷ்ணகிரி

தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ் (வயது 25). இவர், ஓசூரில் மெக்கானிக் பணி செய்துவருகிறார். நந்தீஷ் வசித்துவந்த அதே தெருவைச் சேர்ந்த சுவாதியைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்துவந்துள்ளார். கடந்த ஆண்டுதான் சுவாதி கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பட்டப் படிப்பை முடித்துள்ளார். 

இவர்களின் காதலுக்கு வழக்கம்போல சாதி பெரும் தடையாக இருக்கவே, கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துள்ளனர். சூளகிரியில் தங்களின் காதல் திருமணத்தைக் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி பதிவு செய்துள்ளனர். இருவரின் காதலுக்கும் சுவாதி வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். ஆனால், சுவாதியின் பெற்றோர், இந்தக் காதல் திருமணத்தை ஏற்காமல் கடுமையான ஆத்திரத்திலேயே இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி சுவாதியின் உறவினரான கிருஷ்ணன், காதல் தம்பதிகளிடம் சமாதானம் பேசுவதாக உள்ளூருக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். சமாதானப் பேச்சைத் தொடர்ந்து, நந்தீஷுக்கு சுவாதி வீட்டில் அரை பவுன் தங்க மோதிரம் சீதனமாகக் கொடுத்துள்ளனர். காதல் தம்பதிகளை சுவாதியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டதுபோல நம்பவைத்துள்ளனர். 

பிறகு, அன்று இரவு 11 மணிக்கு ஓசூரில்,  காதல் தம்பதிகள் இருவரையும் சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வேங்கடேசன், கிருஷ்ணன், அஸ்வத்தப்பா, வெங்கட்ராஜ், சாமிநாதன் ஆகியோர் கடத்திச்சென்று தனி அறையில் வைத்து சுவாதியை விட்டுவிடும்படி மிரட்டியுள்ளனர். சுவாதியின் உறவினர்களின் மிரட்டலுக்குப் பயப்படாத நந்தீஷை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று அடித்தே கொலைசெய்துள்ளனர். அதேபோல, சுவாதியையும் அவர்கள் கொலைசெய்தனர்.

பின்னர், கர்நாடக மாநிலம் மண்டியாவை அடுத்துள்ள மலஹள்ளி என்ற இடத்தில், காவிரி ஆற்றில் இருவரின் உடல்களையும் கட்டி ஆற்றில் வீசிவிட்டுத் திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், கர்நாடக போலீஸார் சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா, வேங்கடேசன், கிருஷ்ணன் ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.