Published:Updated:

வீட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கல்! - சிக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

வீட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கல்! - சிக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்
வீட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கல்! - சிக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

கோவில்பட்டி, கயத்தார் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,095 மது பாட்டில்களை தனிப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் உட்பட  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கல்! - சிக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

மிலாடிநபி பண்டிகையை  முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது  உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

வீட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கல்! - சிக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

இதில் கோவில்பட்டி பால்பாண்டி பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த ஆரோக்கியராஜ், கதிரேசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விற்பனைக்காக  20 அட்டைப்பெட்டிகள் மற்றும் 3 சிறிய சாக்குப் பைகளில் வைத்திருந்த 1,087 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

வீட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கல்! - சிக்கிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

இதே போல, கயத்தார் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரான வினோபாஜியின் வீடு வடக்குத் தெருப்பகுதியில் உள்ளது. வீட்டின் தொழுவத்தில் 20 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,008 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வினோபாஜியை போலீஸார் கைது செய்துள்ளனர். சட்ட விரோத மதுவிற்பனை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் இரு பகுதிகளில் 2,095 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.