Published:Updated:

திருட்டு டி.வி.டி. தயாரித்த ஒருவர் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

திருட்டு டி.வி.டி. தயாரித்த ஒருவர் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
திருட்டு டி.வி.டி. தயாரித்த ஒருவர் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
திருட்டு டி.வி.டி. தயாரித்த ஒருவர் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

சென்னை: சென்னையில் திருட்டு டி.வி.டி.க்கள் தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் மீட்கப்பட்டது.

சென்னை மாநகரில் சமீபத்தில் வெளியான புதிய திரைப்படங்களை திருட்டு சி.டி, டி.வி.டி.களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்கும் நபர்கள் மீது தக்க  நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவு நல்லசிவம் அறிவுரையின்படி, காவல் துணை ஆணையாளர் சிவக்குமார் மேற்பார்வையில். காவல் உதவி ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவு தலைமையில், மத்திய குற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஆய்வாளர் மதி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை அருகே உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் உரிமம் பெறாத தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் திருட்டு வி.சி.டி.கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திருட்டு டிவிடிக்கள் மற்றும் சி.டி.க்கள் தயாரித்த ஷாஜகான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 2000 திரைப்பட டி.வி.டி.க்கள், 3000 பதிவு செய்யாத காலியான டிவிடிக்கள். 21 டி.வி.டி. ரைட்டர் மெஷின்கள் மற்றும் இதர சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.

திருட்டு டி.வி.டி. தயாரித்த ஒருவர் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

விசாரணையில், அப்துல் காரிம் என்பவர்தான் இந்த திருட்டு டி.வி.டி. தயாரிக்கும்

##~~##
தொழிலை செய்வதற்காக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து டி.வி.டி.க்கள் தயாரித்து வந்ததும், அவருக்கு உடந்தையாக லியாகத் அலி என்பவர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்த முக்கிய குற்றவாளியான அப்துல் காரிம் தலைமறைவாகி விட்டார். ஆகவே தலைமறைவான அப்துல் காரிமை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போல் உரிமம் பெறாத புதிய திரைப்படங்ளின் டி.வி.டி.க்கள் மற்றும் திருட்டு டி.வி.டி.க்கள் மற்றும் சி.டி.க்கள் மற்றும் தயாரிப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.