Published:Updated:

ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள்

ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி

“எம்எஸ்.சி பி.எட் படிச்சிட்டு, தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்றேன். ஓர் உறவினர் மூலமா சோஃபியா அறிமுகமானாங்க. அதிகாரத் தோரணையுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசினாங்க. இந்திய உணவுக் கழகத்தில அதிகாரியாக இருப்பதாகவும், அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தர்றதாவும் சொன்னாங்க. மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தேன். விருத்தாசலம் அரசு சேமிப்புக் கிடங்குல பயிற்சி கொடுத்து, பணி நியமன ஆணையையும், அடையாள அட்டையையும் கொடுத்தாங்க. சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் போய் விசாரிச்சப்போ, இவை எல்லாமே போலி எனத் தெரியவந்துச்சு” என வேதனையுடன் சொன்னார் இளந்தீபன்.

ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள்

ஏமாந்த இளந்தீபன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உளுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அளித்த புகாரைத் தொடர்ந்து சோஃபியா, அவரின் அம்மா ஆரோக்கியமேரி ஆகியோர்மீது மோசடி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். 

சிலுவைபுரம் கிராமத்தைச் சேர்ந்த சோஃபியா, இந்திய உணவுக் கழகத்தில் கட்டுப்பாடு அதிகாரியாகப் பணிபுரிவதாகச் சொல்லி பலரை ஏமாற்றிவந்துள்ளார். குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி ஏராளமான இளைஞர்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது.

ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள்

இவரிடம் ஏமாந்த கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிபிரகாஷ், “சோஃபியாவுடன் ஆக்டிங் டிரைவராக சில முறை போயிருக்கிறேன். அதிகாரியைப் போல ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்வார். அவரை உணவுக் கழக அதிகாரி என்று நம்பினேன். என் மனைவி ஒரு பட்டதாரி. அவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி என்னிடம் ரூ.3 லட்சம் வாங்கினார். அதுபோக, அவசரத் தேவை என்று சொல்லி என் மனைவி கழுத்தில் கிடந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை வாங்கிச்சென்றார். அவர் கொடுத்த நியமன ஆணை போலியானது என்று தெரிந்து,பணத்தைத் திருப்பிக்கேட்டேன். அவர் தரவே இல்லை” என்றார். 

ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள்

புதுச்சேரியில் சோஃபியாவை ஜூலை 23-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவரின் காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்துவரும் சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் பேசினோம். “இந்திய உணவுக் கழகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கையெழுத்துகளை இவராகவே போட்டுப் பணி நியமன ஆணைகளைப் போலியாக தயார்செய்துள்ளார். நாங்கள் கையெழுத்து போடச் சொன்னால் விதவிதமாகக் கையெழுத்துப் போடுகிறார். இதுவரை 74 பேரிடம் ரூ.3.5 கோடி மோசடி செய்துள்ளார். கடலூர் கம்மியம்பேட்டை, சிதம்பரம் ஓமகுளம் ஆகிய பகுதிகளில் சொகுசு வீடுகளைக் கட்டிவருகிறார். கடலூர் முருகதாஸ் என்பவருடன் சேர்ந்துதான், இந்த மோசடி வேலைகளைச் செய்துள்ளனர். அவர்மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளோம்” என்றார் அவர்.

- ஜி.சதாசிவம்,   படங்கள்: எஸ்.தேவராஜன்