Published:Updated:

`விலை ரூ.9 கோடி!’ - அரியவகை டக்‌ஷக் பாம்பைக் கடத்த முயன்ற இளைஞர் கைது

`விலை ரூ.9 கோடி!’ - அரியவகை டக்‌ஷக் பாம்பைக் கடத்த முயன்ற இளைஞர் கைது
`விலை ரூ.9 கோடி!’ - அரியவகை டக்‌ஷக் பாம்பைக் கடத்த முயன்ற இளைஞர் கைது

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பராக்கா பகுதியில், நேற்று ஊர்வன வகையைச் சேர்ந்த டக்‌ஷக் பாம்பு ஒன்றை கடத்த முயன்றதற்காக இஷா செயிக் (Isha seikh) என்னும் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

`விலை ரூ.9 கோடி!’ - அரியவகை டக்‌ஷக் பாம்பைக் கடத்த முயன்ற இளைஞர் கைது

இதன் சந்தை விலை ரூபாய் 9 கோடி இருக்கும் என்கின்றனர். இந்த வகை பல்லியின் இறைச்சியை ஹெச்.ஐ.வி (HIV) போன்ற கொடிய நோய்களுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.  இதன் காரணமாகக் கடந்த சில வருடங்களாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மியான்மர் பகுதிகளில் இருந்து இந்த வகை பாம்புகள் அதிகம் கடத்தப்பட்டு, சட்ட விரோதமாக ஏற்றுமதிசெய்து வருகிறது. 

கைதுசெய்யப்பட்ட இளைஞர், டக்‌ஷக் பாம்பை மல்டா மாவட்டம் கலியாசாவக் காடுகளில் பிடித்ததாகவும், அதை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவரிடம் விற்க இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர் ஜங்கிபூர் துணை மண்டல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்தப் பாம்பு, தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.