Published:Updated:

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது

சிவகாசி: அருகே 5 பேரைப் பலி கொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த நாராயணபுரத்தில் உள்ள ரத்னா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில், முருகன் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் என்ற தொழிலாளி, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

##~~##
இந்த விபத்திற்கு சட்ட விதிமுறைகளை மீறி மருந்து தயாரித்ததே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக ஒரு கணக்காளர் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.