Published:Updated:

சாக்லெட் ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

சாக்லெட் ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
சாக்லெட் ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

திருவள்ளூர்: சாக்லெட் வாங்கி தருவதாக கூறி ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

சாக்லெட் ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம், பாண்டூர் காலனியைச் சேந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் 5 வயது மகள் லதா. அதே தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (எ) பெர்னான்ட்ஷா (30) என்ற வாலிபர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து சாக்லெட் வாங்கி வருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

கடந்த 22ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் பெற்றோருக்கு நேற்றுதான் தெரிய வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த புகாரின் பேரில் ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

##~~##
ராஜ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
கவிமணி


படம்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி