Published:Updated:

குரங்கனியில் பலாத்காரம் செய்யப்பட்ட வெண்டிஸ்: இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

 குரங்கனியில் பலாத்காரம் செய்யப்பட்ட வெண்டிஸ்: இங்கிலாந்து பிரதமர் கண்டனம்
குரங்கனியில் பலாத்காரம் செய்யப்பட்ட வெண்டிஸ்: இங்கிலாந்து பிரதமர் கண்டனம்
 குரங்கனியில் பலாத்காரம் செய்யப்பட்ட வெண்டிஸ்: இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

போடி: இந்தியாவில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பதை அண்மைக் காலத்து நிகழ்வுகள் நம்மை சவுக்கால் அடித்துக் கொண்டே இருக்கின்றன. டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் கற்பழிப்பு என இந்தியாவின் மானத்தை மானாங் கண்ணியாய் கப்பல் ஏற்றியவர்கள், இப்போது, சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் மீதும் கைவைத்திருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம், லண்டனிலிருந்து வெண்டிஸ் ஸ்டார்ச் (40) என்ற பெண்மணி தேனி மாவட்டம் குரங்கனிக்கு சுற்றுலா வந்தார். குரங்கனியின் உச்சியில் டாப் ஸ்டேஷனில் உள்ள ஸ்கை கேட் என்ற தனியார் ரிசார்ட்டில் டென்ட் அடித்து தங்கியிருந்தார். பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு, அந்த ஹோட்டலில் வேலை பார்த்த சஜீஸ் (35) என்பவர் தனியாக குடிலில் தங்கியிருந்த வெண்டிஸை பலாத்காரம் செய்திருக்கிறார். பதறிப்போன வெண்டிஸ், அவரிடமிருந்து தப்பிக்க முயற்சித்திருக்கிறார். இந்த போராட்டத்தில் ஆடைகள் எல்லாம் கிழிந்து அலங்கோலமாகிப் போனார் வெண்டிஸ்.

##~~##
நல்லவேளையாக அவரது அலறலைக் கேட்டு ஹோட்டல் பணியாளர்கள் ஓடிவர, வெண்டிஸ் காப்பாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தை அப்படியே மூடிமறைத்து தனது சிப்பந்தியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது ஹோட்டல் நிர்வாகம். இதையறிந்த வெண்டிஸ், மறுநாள் காலையிம் மூணாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கம் போல, ''இது எங்க லிமிட் இல்லையே... தேவிகுளம் ஸ்டேஷன்ல போய் புகார் பண்ணுங்க" என்று கைகாட்டி விட்டிருக்கிறது மூணாறு போலீஸ்!
தேவிகுளம் போலீஸோ, 'சம்பவம் நடந்தது தமிழ்நாடு போலீஸ் லிமிட். அங்க போயி புகார் குடுங்க" என்று அலைக்கழித்தது. வெறுத்துப் போன் வெண்டிஸ், உடனடியாக இங்கிலாந்திற்கு கிளம்பி விட்டார். அங்கு போனதும் தூதரகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். வெகுண்டெழுந்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள், அந்தப் புகாரை உடனடியாக இந்திய தூதரகத்திற்கு அனுப்பி குடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள், தேனி மாவட்ட போலீஸை உலுக்க, சஜீஸை பாலியல் வன்புணர்ச்சி புகாரின் கீழ் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி இருக்கிறது தேனி போலீஸ்.
இச்சம்பவம் குறித்து தேனி மாவட்ட எஸ்.பி.பிரவீன்குமார் அபினவிடம் கேட்டபோது, ''22 ஆம் தேதிதான் புகார் வந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து சஜீஸை கைது செய்திருக்கிறோம். எங்கள் சைடில் எந்த தாமதமும் இல்லை" என்றார்.
வெண்டிஸ் விவகாரம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதை அடுத்து, இந்தியாவின் மானம் கடல் கடந்தும் காற்றில் பறக்கிறது!
 
-சண். சரவணக்குமார்