Published:Updated:

நிலக்கரி ஊழல்: அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தல்களை சிபிஐ ஏற்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

நிலக்கரி ஊழல்: அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தல்களை சிபிஐ ஏற்கக் கூடாது:  உச்ச நீதிமன்றம்
நிலக்கரி ஊழல்: அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தல்களை சிபிஐ ஏற்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்
நிலக்கரி ஊழல்: அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தல்களை சிபிஐ ஏற்கக் கூடாது:  உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்துகொண்ட சிபிஐ-யின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தல்களை ஏற்று சிபிஐ செயல்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பகிர்ந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்தவாரம் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கடந்தவாரம் தாக்கல் செய்த அபிடவிட்டில், நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த சிபிஐ விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சகத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பகிர்ந்துகொண்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

##~~##
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்றூ விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சகத்துடன் பகிர்ந்துகொண்டதற்காக சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தன நீதிபதிகள், இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்றும்,  வழக்கின் ஒட்டுமொத்த நடவடிக்கையையே உலுக்குவதாக உள்ளது என்றும், விசாரணை அறிக்கையை அரசுடன் பகிர்ந்துகொண்டதை பற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியதோடு, அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தல்களை ஏற்று சிபிஐ செயல்படக்கூடாது என்றும் கூறினர்.
மேலும் அரசியல் தலையீட்டிலிருந்து சிபிஐ-யை விடுவிப்பதுதான் நமது முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும்,சிபிஐ-யை மீண்டும் சுதந்திரமான அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.