Published:Updated:

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

மதுரை: தி.மு.க. பிரமுகரும், மு.க.அழகிரியின் நண்பருமான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அட்டாக் பாண்டி மனுத் தாக்கல் செய்துள்ளார். பாண்டிக்கு முன்ஜாமீன் கொடுக்க அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது சந்தேகம்தான்.
 

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

தி.மு.க. பிரமுகரும், மு.க.அழகிரியின் தொழில் நண்பருமான பொட்டு சுரேஷ், கடந்த ஜனவரி 31ஆம் தேதி அழகிரியின் வீடு அருகிலேயே படுகொலை செய்யப்பட்டார்.

அழகிரியின் பிறந்த நாளுக்கு மறுநாள் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அடுத்த 2 நாட்களில் சந்தானம், சபாபதி உள்பட 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை செய்யச் சொன்னது விஜயபாண்டியும், பிரவும் தான் என்று அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து இருவரும் ஒரு வாரத்தில் சரணடைந்தார்கள். சுமார் 2 மாதத்திற்கு பிறகு காட்டுவாசி முருகனும், வில்வதுரையும் சரணடைந்தார்கள்.

இதற்கிடையே பொட்டு கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரோக்கிய பிரபுவின் தம்பி பிரவீண்குமாரும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பொட்டு கொலை வழக்கில் தொடர்புடைய 18 பேரில் 17 பேர் பிடிபட்டுவிட்டனர். அட்டாக் பாண்டி மட்டும் தான் மீதி. அவர் இருக்கும் இடத்தையும் ஓரளவுக்கு போலீஸார் கணித்துவிட்டார்கள்.

இந்தச் சூழலில் முன்ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. "எனக்கும், பொட்டு சுரேஷ் கொலைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தி.மு.க. புள்ளி என்பதால் என் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்து போலீஸார் என்னைத் தேடி வருகிறார்கள். என் குடும்பத்தினரையும், உறவினர்களையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள். நான் மண்டல வேளாண் விற்பனைக் குழுத் தலைவராக அரசு பதவி வகித்தவன். என்னை கிரிமினல் போல போலீஸார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

##~~##
இதற்கிடையே, சந்தானம், சபாரத்தினம், சேகர், கார்த்திக், லிங்கம், செந்தில், நாகமுருகன், விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு உள்ளிட்ட 14 பேர் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சந்தானம் உள்ளிட்ட 7 பேருக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கியது. ஆனால், அரசுத் தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்து, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்றனர்.
தற்போதுள்ள சூழலில் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால், அட்டாக் பாண்டியும் முன் ஜாமீன் பெற்றுவிடுவார் என்பதால் அதனை அரசுத் தரப்பு கடுமையாக ஆட்சேபித்து வருகிறது. எனவே, அட்டாக்கிற்கு முன்ஜாமீன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
கே.கே.மகேஷ்


படம்:
பா.காளிமுத்து