வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (05/12/2018)

கடைசி தொடர்பு:19:33 (05/12/2018)

பகுஜன் சமாஜ் அரசியல் கட்சியா? - கோகுல்ராஜ் கொலை வழக்கில் குறுக்கு விசாரணை

பகுஜன் சமாஜ் அரசியல் கட்சியா? - கோகுல்ராஜ் கொலை வழக்கில் குறுக்கு விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் குறுக்கு விசாரணையின் போது நடைபெற்ற வாதங்களைப் பார்ப்போம்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர், அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கம்போல யுவராஜூம், அவருடைய ஆட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.

டிசம்பர் 3-ம் தேதி கோகுல்ராஜின் நண்பரும், வழக்கறிஞருமான பார்த்திபனிடம் யுவராஜ் வழக்கறிஞர் ஜி.கே என்கிற கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை...

வழக்கறிஞர் ஜி.கே: உங்க சொந்த ஊர் சந்தியூரா?
பார்த்திபன்: ஆம்
வழக்கறிஞர் ஜி.கே: சந்தியூர் எங்கே இருக்கிறது?
பார்த்திபன்: சேலத்திலிருந்து ராசிபுரம் செல்லும் வழியில் தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்தில் சந்தியூர் இருக்கிறது.
வழக்கறிஞர் ஜி.கே: ஸ்கூல் படித்தது எங்கே?
பார்த்திபன் சாட்சியம்பார்த்திபன்: நான் 8-ம் வகுப்புவரை மல்லூரில் படித்தேன். அதன் பிறகு 12ம் வகுப்பு வரை மங்களபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்தேன்.
வழக்கறிஞர் ஜி.கே: சந்தியூரிலிருந்து ஸ்கூல் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
பார்த்திபன்: 24 கி.மீட்டர்.
வழக்கறிஞர் ஜி.கே: கல்லூரிப் படிப்பு எங்க படிச்சீங்க?
பார்த்திபன்: சேலம் சட்டக்கல்லூரியில் படித்தேன்.
வழக்கறிஞர் ஜி.கே: சேலத்திலிருந்து ஓமலூர் எங்கே எவ்வளவு தூரத்தில் உள்ளது?
பார்த்திபன்: சேலத்திலிருந்து மேற்கே 12 கி.மீட்டரில் உள்ளது.
வழக்கறிஞர் ஜி.கே: கோகுல்ராஜை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தெரியும்?
பார்த்திபன்: நான்கைந்து வருடத்திற்கு முன்பே அவரைத் தெரியும்.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்களும் கோகுல்ராஜூம் ஒன்றாகப் படித்தீர்களா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்க என்ன தொழில் செய்து வருகிறீர்கள்?
பார்த்திபன்: சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன்.
வழக்கறிஞர் ஜி.கே: தொழில் நிமித்தமாக கோகுல்ராஜ் உங்களிடம் வந்திருக்கிறாரா?
பார்த்திபன்: இல்லை.

வழக்கறிஞர் ஜி.கே: கோகுல்ராஜ் உங்களுக்கு எப்படிப் பழக்கமானார்?
பார்த்திபன்: என் உறவினர் வீட்டுக்கு ஓமலூர் போகும் போது பழக்கமானார். பிறகு சந்தியூர் கிரிக்கெட் டீமில் நானும், ஓமலூர் கிரிக்கெட் டீமில் கோகுல்ராஜூம் விளையாடுவோம். அப்போது இருவரும் சந்தித்துக் கொள்வோம்.
வழக்கறிஞர் ஜி.கே: இதைத் தவிர வேறு தொடர்பு இருந்ததா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: ஓமலூரில் நிறைய கிரிக்கெட் டீம் உள்ளதா?
பார்த்திபன்: ஆம். இருக்கிறது.
வழக்கறிஞர் ஜி.கே: உங்களை முதன் முதலில் யார் எங்கே விசாரித்தார்கள்?
பார்த்திபன்: 27.6.2015 அன்று, நான் சேலம் அரசு மருத்துவமனையில் இருக்கும் போது டி.எஸ்.பி., விஷ்ணுப்பிரியா விசாரித்தார்.
வழக்கறிஞர் ஜி.கே: சேலம் மருத்துவமனையில் உங்களிடம் டி.எஸ்.பி விசாரிக்கும் போது கோகுல்ராஜின் அம்மா சித்ரா, அவரது மகன் கலைச்செல்வன் இருந்தார்களா?
பார்த்திபன்: கவனிக்கவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: குற்றவியல் நடைமுறைச்சட்டம் 161-ன்படி காவல்துறையினர் எவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
பார்த்திபன்: தெரியும்.

வழக்கறிஞர் ஜி.கே: விஷ்ணுப்பிரியா, சட்டப்பிரிவு 161-ன் படி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாரா?
பார்த்திபன்: இல்லை. டைரியில்தான் எழுதிக்கொண்டார்.
வழக்கறிஞர் ஜி.கே: அதன் பிறகு உங்களை யார், எப்போது விசாரித்தார்கள்?
பார்த்திபன்:  27.11.2015 அன்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தார்கள்.
வழக்கறிஞர் ஜி.கே: இவர்களைத் தவிர வேறு காவல்துறையினர் யாராவது உங்களை விசாரித்தார்களா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: 27.11.2015 அன்று காவல்துறையினர் விசாரித்தபோது 161-ன் படி வாக்குமூலம் பதிவு செய்தார்களா?
பார்த்திபன்: நான் சொன்னதை பேப்பரில் எழுதிக்கொண்டார்கள்.
வழக்கறிஞர் ஜி.கே: டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்த போதும் முதல் விசாரணையில் கூறியுள்ள விவரங்களைக் கூறினீர்களா?
பார்த்திபன்: கூறினேன்.
வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவழக்கறிஞர் ஜி.கே: இந்த வழக்கில் உங்களைச் சாட்சியாகப் போட வேண்டும் என மனு செய்தீர்களா?
பார்த்திபன்: இந்த வழக்கில் என்னைச் சாட்சியாகப் போடாததால் சாட்சியாகச் சேர்க்க வேண்டும் என மனு போட்டேன்.  
வழக்கறிஞர் ஜி.கே: எந்த தேதி? எந்த மாதத்தில் மனு போட்டீர்கள்?
பார்த்திபன்: 2015 வருடம்.  
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் மனு தாக்கல் செய்யும் போது சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்து விட்டார்களா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் மனு தாக்கல் செய்த பிறகு எத்தனை நாள்கள் கழித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்கள்?
பார்த்திபன்: தெரியவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கின் சாட்சிகள்  பட்டியலை நீதிமன்றத்தில் கொடுத்தார்களா?
பார்த்திபன்: தெரியவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: சி.டி ஃபைலில் உங்க பெயர் இருந்ததா?
பார்த்திபன்: தெரியாது. சம்மன் வந்த பிறகுதான் எனக்குத் தெரியும்.
வழக்கறிஞர் ஜி.கே: யார் உங்களுக்கு சம்மன் கொடுத்தது?
பார்த்திபன்: நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
வழக்கறிஞர் ஜி.கே: சம்மன் வந்த தேதி, மாதம் தெரியுமா?
பார்த்திபன்: 2015 நவம்பர் மாதம்.

வழக்கறிஞர் ஜி.கே: சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தபோது நீங்கள் கோகுல்ராஜின் நண்பர் என்று சொல்லி இருக்கிறீர்கள்?
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: எந்த வகையில் நண்பர் என்று சொல்லி இருக்கிறீர்களா?
பார்த்திபன்: சொல்லி இருக்கிறேன்.
வழக்கறிஞர் ஜி.கே: உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு யார் போடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
பார்த்திபன்: ஆட்கொணர்வு மனு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போடலாம் என்பது 2015-ல் எனக்குத் தெரியாது.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் போது கோகுல்ராஜின் நண்பர் என்று பிரமாணப் பத்திரத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தீர்கள்?
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: (ஆவணத்தைக்காட்டி) கோகுல்ராஜ் உங்கள் நண்பர் இல்லை. நீங்கள் பொய்யாக உயர்நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறீர்கள்.
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: கோகுல்ராஜ் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு பார்த்ததாக காவல்துறை விசாரணையில் சொல்லி இருக்கிறீர்கள்?
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: கோகுல்ராஜ் இறந்த சம்பவம் எப்போது தெரியும்?
பார்த்திபன்: 24.6.2015 இரவு 9:30 மணிக்கு.
வழக்கறிஞர் ஜி.கே: சடலம் ரயில்வே ட்ராக்கில் கிடந்தது தெரியுமா? தெரியாதா?
பார்த்திபன்: கோகுல்ராஜ் அம்மா...(வழக்கறிஞர் ஜி.கே: குறுக்கீடு செய்து தெரியுமா? தெரியாதா? என்பதை மட்டும் சொல்லுங்க) சித்ராவுக்கு தகவல் வந்ததாக என் நண்பர் என்னிடம் சொன்னார்.
வழக்கறிஞர் ஜி.கே: அந்த நண்பர் பெயர் என்ன?
பார்த்திபன்: சுரேஷ்.
வழக்கறிஞர் ஜி.கே: அப்ப எங்க இருந்தீங்க?
பார்த்திபன்: சேலத்தில் இருந்தேன்.
வழக்கறிஞர் ஜி.கே: சடலத்தைப் பார்க்க முயற்சித்தீர்களா?

பார்த்திபன்: கோகுல்ராஜின் உடல் ஈரோடு ஜி.ஹெச்-சிற்கு கொண்டு சென்றதாகக் கூறினார்கள். அதனால் இரவு போகவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: பிறகு எப்போது சடலத்தைப் பார்க்கப் போனீர்கள்? அப்போது நேரம் என்ன இருக்கும்?
பார்த்திபன்: மறுநாள் காலை சுமார் 8 மணி இருக்கும்.
வழக்கறிஞர் ஜி.கே: இரவே சடலத்தைப் போய் பார்க்காததற்கான காரணம் தகவல் பின்னிட்டுக் கிடைத்ததால் தானா?
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: திருச்செங்கோடு காவல் நிலையத்திற்குப் போகும் போது என்ன மணி இருக்கும்?
பார்த்திபன்: மதியம் சுமார் 2 மணி இருக்கும்.
வழக்கறிஞர் ஜி.கே: காவல் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள்?
பார்த்திபன்: மதியம் 3:30 மணி வரை இருந்தேன்.
வழக்கறிஞர் ஜி.கே: அதன் பிறகு?
பார்த்திபன்: பெருந்துறை வழியாகச் சேலம் சென்று விட்டேன்.
வழக்கறிஞர் ஜி.கே: திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கும் சேலத்திற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்.
பார்த்திபன்: தெரியாது. காரில் சென்றால் முக்கால் மணி நேரம் ஆகும்.

மதியத்திற்குப் பிறகு...

வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் காவல் நிலையம் சென்றபோது எஃப்.ஐ.ஆர் போட்டு விட்டார்களா?
பார்த்திபன்: போட்டதாகச் சொன்னார்கள்.
வழக்கறிஞர் ஜி.கே: யார் புகார் கொடுத்தார்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறினாரா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் எஃப்.ஐ.ஆர் நகல் புகார்தாரருக்குக் கொடுக்கப்பட்டு, புகார் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்படும்.
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: சித்ரா உங்ககூட இருந்தாரா?
பார்த்திபன்: என்னுடன் இல்லை. காவல் நிலையத்தில் இருந்தார்.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் காவல் நிலையத்திற்குச் சென்ற போது ஸ்வாதி இருந்தாரா?
பார்த்திபன்: இன்ஸ்பெக்டர் ஸ்வாதியை விசாரித்துக் கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் ஜி.கே: ஸ்வாதியிடம் இன்ஸ்பெக்டர் வாக்குமூலம் பெற்றாரா?
பார்த்திபன்: எனக்குத் தெரியாது.
வழக்கறிஞர் ஜி.கே: அப்போது ஸ்வாதி உங்க பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாரா?
பார்த்திபன்: இல்லை. இன்ஸ்பெக்டர் ஒரு பக்கத்தில் ஸ்வாதி மற்றொரு பக்கத்தில், நான் இன்ஸ்பெக்டர் எதிரே அமர்ந்திருந்தேன்.
வழக்கறிஞர் ஜி.கே: அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தீர்களா?
பார்த்திபன்: பார்த்தும், கேட்டும் கொண்டிருந்தேன்.  
வழக்கறிஞர் ஜி.கே: ஸ்வாதி வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டாரா?
பார்த்திபன்:ஸ்வாதி கூறியதை இன்ஸ்பெக்டர் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் ஜி.கே: புலன் விசாரணையின் போது சாட்சி கூறுவதை புலன் விசாரணை அதிகாரி பதிவு செய்ய வேண்டும். என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
பார்த்திபன்: தெரியாது.
வழக்கறிஞர் ஜி.கே: ஸ்வாதியை இன்ஸ்பெக்டர் எவ்வளவு நேரம் விசாரித்தார்?
பார்த்திபன்: 45 நிமிடம் விசாரித்தார்.
வழக்கறிஞர் ஜி.கே: கோகுல்ராஜின் தாயார் கொடுத்த வாக்குமூலத்தை இன்ஸ்பெக்டர் எழுதிக்கொண்டாரா?
பார்த்திபன்: பார்க்கவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: எவ்வளவு நேரம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார்.
பார்த்திபன்: 2 முதல் 3:30 மணி வரை ஸ்வாதி, சித்ரா, கலைச்செல்வன் ஆகியோர்களை விசாரித்தார். 3:30க்கு மேல் நான் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துட்டேன்.
வழக்கறிஞர் ஜி.கே: புலன் விசாரணையின் போது நீங்கள் கார் வைத்திருந்தீர்களா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே:  யாருடைய காரில் காவல் நிலையத்திற்குச் சென்றீர்கள்?
பார்த்திபன்: என் நண்பர் பரணியின் காரில் சென்றேன்.
வழக்கறிஞர் ஜி.கே: பரணி காவல் நிலையத்திற்கு வந்தாரா?
பார்த்திபன்: வரவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரையோ, சித்ரா கொடுத்த புகாரையோ வாங்கிப் பார்த்தீர்களா?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: மறுநாள் ஈரோட்டிற்கு  எத்தனை மணிக்குச் சென்றீர்கள்?
பார்த்திபன்: காலை 8 மணி
வழக்கறிஞர் ஜி.கே: அங்கு உங்களைக் காவல்துறையினர் எத்தனை மணிக்கு கைது செய்தார்கள்?
பார்த்திபன்: தெரியவில்லை.
வழக்கறிஞர் ஜி.கே: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று எப்போது தோன்றியது?
பார்த்திபன்: பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் தற்கொலையா என மறுநாள் செய்தித்தாள்களில் பார்த்து விட்டு காவல் நிலையத்தில்  ஸ்வாதி, ``யுவராஜூம், அவருடைய ஆட்களும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜை மிரட்டி, அழைத்துச் சென்றார்கள்'' என்று சொன்னதன் அடிப்படையில் இந்த வழக்கு கொலை வழக்காகவும், செய்தித்தாள் மற்றும் வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் உண்மையை அறிந்து கொள்ள ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன்.

வழக்கறிஞர் ஜி.கே: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் போது கோகுல்ராஜ் தாயார் வந்தாரா?
பார்த்திபன்: அவர் துக்கத்தில் இருந்ததால் வரவில்லை.  
வழக்கறிஞர் ஜி.கே: ஆட்கொணர்வு மனு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
பார்த்திபன்: தெரியும்.
வழக்கறிஞர் ஜி.கே: பிரமாண பத்திரத்தில் கோகுல்ராஜின் தாயார் அவருடைய சகோதரர் வராததற்கான காரணத்தைக் கூறி இருக்கிறீர்களா?
பார்த்திபன்: இல்லை. காலை 10:30 மணிக்கு வழக்கைப் பற்றி எடுத்துக் கூறியபோது, நீதிபதி நீங்களே வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்றதால் மனுத் தாக்கல் செய்தேன். அவசர வழக்காக எடுத்துக் கொண்டதால் பிரமாணப் பத்திரம் வழக்கறிஞர் தயாரித்து அதில் நான் கையொப்பமிட்டேன்.
வழக்கறிஞர் ஜி.கே: எங்கு வைத்து பிரமாண பத்திரம் தயாரிக்கப்பட்டது?
பார்த்திபன்: நீதிமன்ற வளாகத்தில்.
வழக்கறிஞர் ஜி.கே: பிரமாண வாக்குமூலம் தயார் செய்தபோது சித்ரா, கலைச்செல்வம், ஸ்வாதி இருந்தார்களா?
பார்த்திபன்:இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே:ஸ்வாதியைக் காவல் நிலையத்தில் எந்த தேதியில் பார்த்தீர்கள்?
பார்த்திபன்: 24.6.2015
வழக்கறிஞர் ஜி.கே: அதன் பிறகு ஸ்வாதியைப் பார்த்தீர்களா?
பார்த்திபன்:இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: ஸ்வாதி மற்றும் சித்ரா இன்ஸ்பெக்டரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தீர்களா?
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: (தட்டச்சாளரிடம் சென்று காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலத்தை டைப் செய்யச் சொல்லி விட்டு) காவல் துறையினர் உங்களை விசாரித்தபோது நீங்கள் கூறியதுதானே?
பார்த்திபன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: பகுஜன் சமாஜ் ஒரு அரசியல் கட்சியா? தேர்தலில் போட்டியிடுமா?
பார்த்திபன்: ஆம்.
வழக்கறிஞர் ஜி.கே: தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு என்று பல கட்சிகள் இருக்கிறதுதானே?
வழக்கறிஞர் ஜி.கே: அது பற்றி எனக்குத் தெரியாது.
வழக்கறிஞர் ஜி.கே: இந்தச் சம்பவத்திற்காக பல சாதிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்களே?
பார்த்திபன்: அது பற்றி எனக்குத் தெரியாது.
வழக்கறிஞர் ஜி.கே: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் போராடினார்கள் தானே?
பார்த்திபன்: தெரியாது.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் 24.6.2015ம் தேதி விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்தேன் என்றும், சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டேன் என்றும் கூறுபவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. நீங்கள் மறுநாள் போராட்டங்களில் கலந்துகொண்டு தலைமையேற்று இந்த வழக்கை திசை திருப்பினீர்கள் என்று சொன்னால்?
பார்த்திபன்: இல்லை.

யுவராஜ்

வழக்கறிஞர் ஜி.கே: உங்கள் செல்வாக்கை பயன்படுத்திக் காவல்துறையினரையும் மற்ற அதிகாரிகளையும் நிர்பந்தப்படுத்தி இந்த வழக்கை ஜோடித்து நீங்கள் இது நாள் வரை நடத்தி வருகிறீர்கள்?
பார்த்திபன்: அது போல நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: காவல் துறையினர் ஸ்வாதி, சித்ரா ஆகியோரை விசாரித்த போது அவர்கள் வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. நீங்கள் பொய்யாகக் கூறுகிறீர்கள்?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: சி.சி.டி.வி புட்டேஜ் முதலில் எங்குப் பார்த்தீர்கள்?
பார்த்திபன்: (தனியார் தொலைக்காட்சியின் பெயரைக் குறிப்பிடுகிறார்)
வழக்கறிஞர் ஜி.கே: அதன் பிறகு எங்கு பார்த்தீர்கள்?
பார்த்திபன்: தற்போது நீதிமன்றத்தில் பார்த்தேன்.
வழக்கறிஞர் ஜி.கே: உங்கள் நிர்பந்தத்தின் பேரிலும், உங்கள் செல்வாக்கினாலும், சி.சி.டி.வி புட்டேஜ்கள் பின்னிட்டு வழக்கிற்காகத் தயாரிக்கப்பட்டன?
பார்த்திபன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் சடலத்தைப் பார்க்கச் சென்றது ஈரோடு மருத்துவமனையா?
பார்த்திபன்: ஆம்
வழக்கறிஞர் ஜி.கே: அது ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனையா?
பார்த்திபன்: தலைமை மருத்துவமனையா என்று தெரியாது. ஈரோடு அரசு மருத்துவமனை.
வழக்கறிஞர் ஜி.கே: ஆட்கொணர்வு மனுவானது உண்மைகளை மறைப்பதற்காகப் போடப்பட்டது?
பார்த்திபன்: கோகுல்ராஜ் என் நண்பர் என்பதால் போட்டேன்.

அதையடுத்து விசாரணை நிறைவு பெற்றது. 12.12.2018ம் தேதி மீண்டும் வாய்தா போடப்பட்டது.