ஆர்டர்லி அட்ராசிட்டி!

மத்திய மாவட்டம் ஒன்றில், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை கமாண்டராக இருப்பவர் இந்தப் பெண் அதிகாரி. இவர் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. ஏற்கெனவே வடமாவட்டம் ஒன்றில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியபோது, அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டரை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாகச் சர்ச்சை கிளம்பியது. அந்த விவகாரத்தில், அப்போது இந்தப் பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அடுத்து இன்னொரு வட மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி-யாக இருந்தபோது, தன்னிடம் ஓட்டுநராக இருந்த கான்ஸ்டபிளைத் திருமணம் செய்துகொண்டார். பெண் அதிகாரியைவிட அந்தக் காவலருக்கு 12 வயது குறைவு. இந்தத் திருமணத்தால் சர்ச்சை ஏற்படவே, அந்த கான்ஸ்டபிள் தன் பணியை ராஜினாமா செய்தார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அந்தக் குழந்தைகளைப் பராமரிக்கவும், வீட்டு வேலைகளுக்காகவும் இருபதுக்கும் மேற்பட்ட ஆர்டர்லிகளை இந்த அதிகாரி பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவரின் குழந்தைகளுக்கு ஆர்டர்லிகள் பணிவிடை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாத இந்த அதிகாரி, வட மாவட்டக் கோயில் நகரம் ஒன்றில் தான் கட்டும் வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக, தன் பட்டாலியனிலிருந்து சில போலீஸாரை அங்கு அனுப்பி வேலை வாங்குகிறாராம். ‘‘இது பெரும் உமையா... ஸாரி! சுமையா இருக்கு’’ எனப் புலம்புகிறார்கள் போலீஸார்.

வார்டுக்கு ஒரு எஸ்.ஐ!

மதுரை மாநகருக்குள் 17 காவல் நிலையங்கள் இருந்தாலும், பெருகிவரும் மக்கள்தொகைக்கு அது மிகவும் குறைவே. இதனால், குற்றச்செயல்கள் அதிகரித்தபடி உள்ளன. இதைத் தடுக்க, வார்டுக்கு ஒரு எஸ்.ஐ. என்ற கணக்கில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் எஸ்.ஐ-களை வார்டு ஆபீஸராக நியமித்துள்ளார், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம். ‘‘இவர்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள இளைஞர்கள், பெரியவர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்துவார்கள். வார்டில் உள்ள அனைவருக்கும் எஸ்.ஐ-யின் செல்போன் நம்பர் வழங்கப்படும். இதில், பொதுமக்கள் பிரச்னைகளைச் சொல்லலாம். வார்டு பகுதிகளுக்குள் புகார்ப் பெட்டி வைக்கப்படும். இதில் புகார் சொல்பவர் தங்கள் பெயர், முகவரியைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. வாரம் ஒருமுறை வார்டு எஸ்.ஐ-க்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். இதன்மூலம் குற்றங்கள் முழுமையாகத் தடுக்கப்படும்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் கமிஷனர்.

தவிப்பில் ஜோடிப் புறா!

துப்பாக்கி சுடுவதில் பெயர் பெற்ற(?) அந்த இன்ஸ்பெக்டர் நாகை மாவட்டத்துக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், வந்த சில நாட்களிலேயே அவருடன் பணிபுரியும் பெண் எஸ்.ஐ-யிடம் காதல் மொழி பேசி தன்வசப்படுத்திவிட்டார். அருகருகே குடியிருப்பு அமைந்ததும் ஒருவகையில் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. விஷயம் மெதுவாக மாவட்டக் காவல் தலைமையைப் போய்ச் சேர்ந்தது. இதற்கெல்லாம் விளக்கம் கேட்டு யாரையும் நோகடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, அதிரடியாக அந்தப் பெண் எஸ்.ஐ-யை தொலைதூரக் காவல் நிலையத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். இதனால், ஜோடிப் புறாக்கள் பிரிந்து தனித்தனியாகத் தவிக்கின்றன.

டோக்கன் டெலிவரியில் சரக்கு!

ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நகருக்குள் உள்ள சாலைகள் மாநில நெடுஞ்சாலையாக மாற்றப் பட்டதால், அப்பகுதிகளில் இயங்கிய டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் உள்ளூர் குடிமகன்களும், சுற்றுலா வரும் மதுபானப் பிரியர்களும் திண்டாடினர். இவர்களுக்குச் சேவை செய்ய, உள்ளூர் போலீஸாரின் துணையுடன் சிலர் ‘மொபைல்’ மதுக்கடைகளை நடத்தி வந்தனர். என்கவுன்டருக்குப் பெயர் பெற்ற மாவட்ட அதிகாரிக்கு இந்தத் தகவல் போனது. அவர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, மொபைல் மது விற்பனையாளர்களை மடக்கி, ஆயிரக்கணக்கான மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தார். இதனால் மது வியாபாரிகள் மட்டுமல்லாமல், அவர்களிடம் மாமூல் வாங்கும் போலீஸாரும் வருமானம் இழந்தனர்.

இழந்த வருமானத்தை மீட்கப் புது டெக்னிக்கை அவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இதன்படி, மது தேவைப்படும் நபர், மது வியாபாரியிடம் பணம் கொடுத்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் டோக்கன் வைத்திருக்கும் நபரைத் தேடிவந்து பாட்டில் டெலிவரி செய்யப்படும். நேர்மையான போலீஸாரின் ஆக்ஷனிலிருந்து மது வியாபாரிகளைக் காப்பாற்ற, பெண் போலீஸ் அதிகாரி ஒருவரே இந்த ‘டோக்கன்’ ஐடியாவை வழங்கியுள்ளார். இதுபற்றி உயர் அதிகாரிக்குத் தெரிந்துவிட, ஐடியா கொடுத்த பெண் அதிகாரி இப்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கலங்கடித்த குஷ்பு போஸ்டர்!

நாகை மாவட்டக் காவல்துறையில் அந்தப் பெண் இன்ஸ்பெக்டரை ‘குஷ்பு’ என்று செல்லமாக அழைப்பார்கள். ஆரம்பத்தில் அதிரடி இன்ஸ்பெக்டர் என்று பெயர் வாங்கியவர், நாளடைவில் மணல் மற்றும் சாராய மாஃபியாக்களுடன் டீலிங்கில் அடிமையாகிவிட்டார். அடுத்தபடியாக, தன் வாகன ஓட்டுநரின் அன்புக்கும் அடிமையாகி விட்டதுதான் பிரச்னையைக் கிளப்பியது. இந்த வில்லங்க விவகாரம் குறித்து உள்ளூரில் சிலர் தாறுமாறாக போஸ்டர் ஒட்டிப் பரபரப்பு கிளப்பிவிட்டனர். ‘இதற்கெல்லாம் காரணம் சக காக்கிகள்தான்’ என்று சந்தேகப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர், தன் ஹிட் லிஸ்ட்டில் இருந்த சிலரைப் பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுத்து ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டார். இப்போது எதிர்ப்பு இல்லாமல் தொடர்கிறது இன்ஸ்பெக்டரின் காதல்.

செயின் பறித்தால் 10 வருடம் ஜெயில்!

சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி மற்றும் ரயில்வே ஐ.ஜி என இரு பதவிகளையும் கவனிக்கிறார் பொன்.மாணிக்கவேல். சிலைக்கடத்தல் பிரிவில் செய்வது போலவே, ரயில்வே போலீஸிலும் அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். இரவு நேரத்தில் நடக்கும் திருட்டுகளை, 14 வருடங்கள் தண்டனைக்குரிய ஹைவே திருட்டு என்கிற வகையில் பதிவுசெய்யச் சொல்லிவிட்டாராம். இதற்கு முன்பு ரயில்வேயில் இப்படி செய்ததில்லையாம். அதேபோல், செயின் பறிப்பு வழக்குகளை ‘கொள்ளை’ என்று பதிவுசெய்யச் சொல்லிவிட்டாராம். இப்படிச் செய்தால் குற்றவாளிக்கு அதிகபட்சம் 10 வருடங்கள் தண்டனை கிடைக்கும். செயின் பறிப்பு என்றால், இரண்டு வருடங்கள்தான் தண்டனை. இந்த அதிரடியால் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கலாம்.

மகனின் தோழிக்காக சிபாரிசு!

செழிப்பான இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்க சகல யுக்திகளையும் பின்பற்று கிறார்கள் சில அதிகாரிகள். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி மகேஷ்குமார் இங்குவந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அவர் மாற்றப்படுவார் என்பதால், அந்த இடத்துக்கு பலர் முட்டி மோதுகிறார்கள். ஒரு பெண் அதிகாரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் நண்பரான இளங்கோவன் மூலம் முயற்சி செய்கிறார். இளங்கோவன் மகனும், அந்த அதிகாரியின் மகளும் ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். அந்த நட்பால் இளங்கோவன், அந்த அதிகாரிக்காக முதல்வரிடம் சிபாரிசு செய்துள்ளார். ஆனால், வீடு கட்டுவதற்காக அனுமதியின்றி ஏலகிரி மலையில் மரம் வெட்டியது, சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்யவேண்டிய நேரத்தில் அவருக்கு முன்ஜாமீன் பெற ஐடியா கொடுத்தது எனக் குற்றச்சாட்டுப் பட்டியல் நீளமாக இருப்பதால், முதல்வர் யோசிக்கிறாராம்.

தனிப்பிரிவை வளைத்த துணிக்கடை!

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக எல்லையை உள்ளடக்கியது நேசமணி நகர் காவல் நிலையம். இங்கு பணிபுரிவதை கெத்தாக நினைப்பார்கள் காவல்துறை அதிகாரிகள். அப்படி வலம்வந்தவர்தான் எஸ்.ஐ மோகன அய்யர். இவர் திடீரென இப்போது கேரள எல்லையான களியக்காவிளை காவல் நிலையத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார். காரணம், ஒரு வில்லங்க விவகாரம். பிரபல துணிக்கடை அதிபரின் மகன் ஒருவர் சமீபத்தில் பி.எம்.டபிள்யூ பைக்கில் அதிவேகமாக வந்து கலெக்டர் அலுவலக சிக்னலில் பணியில் இருந்த காவலர்களிடம் அட்ராசிட்டி செய்தார். அவரைக் கைதுசெய்த எஸ்.ஐ மோகன அய்யர், காவல்நிலைய ஜாமீனில் விட ஒன்றரை லட்ச ரூபாய் பேசி ரூ.50 ஆயிரம் வாங்கியதாகவும், இது உயர் அதிகாரிகள் காதுக்குப் போனதால் பணியிட மாற்றம் நடந்ததாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

மோகன அய்யரோ, ‘‘அந்தத் துணிக்கடை அதிபரின் மகன் நடுரோட்டில் போலீஸாரிடம் மோசமாக நடந்துகொண்டார். அதனால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் உறுதியாக இருந்தேன். ஆனால், மாவட்ட எஸ்.பி-யின் தனிப்பிரிவு அதிகாரி ஒருவர், துணிக்கடை அதிபருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவரின் பிரஷரால், துணிக்கடை அதிபரின் மகனை ஸ்டேஷன் ஜாமீனில் விடுதலை செய்துவிட்டார்கள். எந்தத் தவறும் செய்யாத என்னை, பணம் வாங்கியதாகக் கூறிப் பழிவாங்கிவிட்டார்கள்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம்.

- கனிஷ்கா, செ.சல்மான், ஆர்.மோகன், சி.ய.ஆனந்தகுமார், எம்.இராகவன், எம்.வடிவேல், ஆர்.சிந்து